Kerala Recipe: 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாத மீன் ஊறுகாய்! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

0
96
#image_title

Kerala Recipe: 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாத மீன் ஊறுகாய்! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

சுவையான மீன் ஊறுகாய் கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*சதை பற்றுள்ள மீன் – 1/4 கிலோ
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – 1/2 கப்
*உப்பு – தேவையான அளவு
*கடுகு – 1/2 தேக்கரண்டி
*வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
*இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
*பச்சை மிளகாய் – 2
*கறிவேப்பிலை – 1 கொத்து
*வெள்ளை வினிகர் – 2 தேக்கரண்டி
*பெருங்காயத்தூள் – சிறிதளவு

செய்முறை:-

வாங்கி வந்த மீன் துண்டுகளை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை 30 நிமிடங்கள் ஊற விடவும்.

பிறகு ஒரு துண்டு இஞ்சி மற்றும் 10 பல் பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/4 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு மீனை எண்ணையில் போட்டு பொரித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.பின்னர் பெருங்காயத் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுக்கவும்.

பிறகு கீறிய பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.அதன் பின்னர் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை அதில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

இறுதியாக வெள்ளை வினிகர் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த மீன் ஊறுகாயை ஆறவிட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.சூடான சாதத்திற்கு மீன் ஊறுகாய் சிறந்த காமினேஷனாக இருக்கும்.