Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சிக்கன் குருமா செய்வது எப்படி?

0
357
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சிக்கன் குருமா செய்வது எப்படி?

சிக்கனை வைத்து சுவையான குருமா அதுவும் கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)சிக்கன் – 1/2 கிலோ
2)பெரிய வெங்காயம் – 2(நறுக்கியது)
3)பச்சை மிளகாய் – 5(நறுக்கியது)
4)இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
5)ஏலக்காய் – 1
6)பட்டை – 1
7)பிரியாணி இலை – 1
8)கொத்தமல்லி தழை – சிறிதளவு
9)தேங்காய் பால் – 1 கப்
10)கிராம்பு – 3
11)பெப்பர் தூள் – 1/2 தேக்கரண்டி
12)கறிவேப்பிலை – 1 கொத்து
13)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
14)உப்பு – தேவையான அளவு
15)மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
16)கரிமசால் – 1 தேக்கரண்டி
17)தக்காளி – 1(நறுக்கியது)

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் சிக்கனை போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு குக்கர் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை போட்டு பொரிய விட்டு பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுக்கவும்.

அதன் பின்னர் நறுக்கிய தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மீண்டும் வதக்கி எடுக்கவும்.பிறகு மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரிமசால் தூள்,மிளகு தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும்.

மசாலா கலவை நன்கு வெந்து கொண்டிருக்கும் பொழுது சுத்தம் செய்த சிக்கனை போட்டு கிளறவும்.பிறகு கறிவேப்பிலை,கொத்தமல்லி தழை போட்டு தேங்காய் பால் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி குக்கரை மூடி போட்டு மூடவும்.

2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு விசில் நின்றதும் எடுத்து பார்த்தால் சுவையான சிக்கன் குருமா ரெடி.சப்பாத்தி,பரோட்டா,சூடான சாதத்திற்கு சிக்கன் குருமா சிறந்த காமினேஷனாக இருக்கும்.

Previous article100 வயது வரை எந்த நோயும் உடலில் அண்டாமல் இருக்க சீந்தில் பட்டையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!
Next articleமார்பில் தேங்கிய சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் இந்த பானம் பற்றி தெரியுமா?