கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் – சுவையாக செய்வது எப்படி?

0
153
#image_title

கேரளா ஸ்பெஷல் சக்க அவியல் – சுவையாக செய்வது எப்படி?

நம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உணவு வகை, சமையல் முறை வெவ்வேறாக இருக்கிறது. அதில் கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய்’எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர். இதனால் அவர்களின் உணவின் சுவை, வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. புட்டு, இடியப்பம், கடலை கறி உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது அவியல். பலாக்காயை போட்டு சமைக்கப்படும் இந்த அவியலை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும்

தேவையான பொருட்கள்:-

1)பச்சை பலாக்காய் – 1 கப்

2)கடுகு

4)மஞ்சள் தூள் – 1 சிட்டிகை அளவு

5)மிளகாய் தூள் – 1 சிட்டிகை அளவு

6)கறிவேப்பிலை – 1 கொத்து

7)உப்பு – தேவையான அளவு

8)தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

அரைக்க

1)தேங்காய் – 1/2 கப்

2)சீரகம் – 1/2 தேக்கரண்டி

3)பூண்டு பல் – 1

4)கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை…

1 கப் பலாக்காயை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அவை சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பலாக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும். பிறகு சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் ஒரு கிளறு கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.

Previous articleகனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!!
Next articleமுகத்தை பளபளப்பாக மாற்றும் நான்கு பொருள்கள் கொண்ட ஜூஸ்! எவ்வாறு தயார் செய்வது?