சலிக்காமல் சாப்பிட தூண்டும் கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம் : சுவையாக செய்வது எப்படி?

0
161
#image_title

சலிக்காமல் சாப்பிட தூண்டும் கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம் : சுவையாக செய்வது எப்படி?

பலாப்பழம் நன்மைகள் :

வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும பலாப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பலாப்பழத்தின் சுவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை  ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமல்லாமல், பலாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கின்றன. பலாப்பழ கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலின் செல்களில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தம் செய்கிறது. மேலும், புற்றுநோய்யிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னைகளை சரிசெய்ய உதவி செய்கிறது.

தேவையான பொருட்கள்

பலாப்பழ சுளைகள் – 20
பொடி செய்த வெல்லம் – 3 கப்
ஏலக்காய் தூள் – தேவைக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப
முந்திரி, திராட்சை – 10
தேங்காய் பால் – 5 கப்
நெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பலாப்பழ சுளைகளை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய் சேர்க்க வேண்டும்.

நெய் சூடானதும் நறுக்கி வைத்த பலாப்பழ துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பலாப்பழம் நன்றாக வதங்க வேண்டும். பலாப்பழம் நன்றாக வதங்கிய பிறகு தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும்.

பலாப்பழம் வெந்ததும் அதில் 2 கப் தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்னர், அதில் வெல்லத்தைப் போட்டு நன்றாக கிண்ட வேண்டும்.

வெல்லம் நன்றாக கரைந்து கெட்டியானதும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்க வேண்டும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கொஞ்சம் விட்டு, அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து, பாயாசத்தில் சேர்த்து பரிமாறினால் சுவையான கேரளா ஸ்பெஷல் பலாப்பழ பாயாசம் ரெடி.

Previous articleஅடடா.. நாக்கில் எச்சில் ஊறும் சுவையான இறால் வடை – செய்வது எப்படி?
Next articleசெப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!