செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

0
42
#image_title

செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆயிரகணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.அந்த வகையில் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று மயிலாடுதுறையில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் (VISTAS – வேல்ஸ் பல்கலைகழக வளாகம் அருகில்) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முகாமில் 200க்கும் அதிகமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன.படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கு ஏற்றார் போல் வேலை வழங்கப்பட உள்ளது.

1.மாவட்டம்: மயிலாடுதுறை

இடம்: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

முகம் நடைபெறும் நாள்: செப்டம்பர் 16

நேரம்: 8:30 மணி முதல் மதியம் 3 மணி வரை

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி,12ஆம் வகுப்பு தேர்ச்சி,ஐடிஐ,டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள்,செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை

2.மாவட்டம்: மயிலாடுதுறை

இடம்: பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தில் (VISTAS – வேல்ஸ் பல்கலைகழக வளாகம் அருகில்)

முகம் நடைபெறும் நாள்: செப்டம்பர் 16

நேரம்: 9 மணி முதல் மதியம் 3 மணி வரை

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி,12ஆம் வகுப்பு தேர்ச்சி,ஐடிஐ,டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள்,செவிலியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை

மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள தகுதி மற்றும் ஆர்வம் இருக்கின்ற நபர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்கிற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.