அடடா.. நாக்கில் எச்சில் ஊறும் சுவையான இறால் வடை – செய்வது எப்படி?

0
34
#image_title

அடடா.. நாக்கில் எச்சில் ஊறும் சுவையான இறால் வடை – செய்வது எப்படி?

இறால் நன்மைகள்

கடல் உயிரினமான இறாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இறாலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். இறாலில்  2 முக்கியமான தாதுக்களால் நிறைந்து காணப்படுகிறது. மேலும், அதில் உள்ள துத்தநாகம்,செலினியம் ஒருவரின் சருமத்தில் எண்ணெய் பிசுக்கு இல்லாமல் நன்மை பயக்கும்.

தேவையான பொருட்கள்

இறால் – 200 கிராம்
கடலைபருப்பு – 500 கிராம்
பூண்டு –  12 பல்
இஞ்சி –  3 துண்டு
கறிவேப்பிலை –  சிறிதளவு
சோம்பு – 2 ஸ்பூன்
வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் –  10 ( பொடியாக நறுக்கியது )
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் இறாலை தோலை உரித்து, நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
சுத்தம் செய்த இறாலில் உப்பு, மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்த இறாலை போட்டு நன்றாக வேக விடுங்கள்.
கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த கடலைபருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
இதன் பின்பு, இஞ்சி, பூண்டு, சோம்பு, உப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளுங்கள்.
பின்னர், மிக்ஸியில் வேக வைத்த இறாலை சேர்த்து அரைத்து, கடலைப்பருப்பு கலவையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடலைப்பருப்பு இறால் மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க வறுத்து எடுத்தால் சுவையான இறால் வடை ரெடி.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இறால் வடையை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் ட்ரை பண்ணுங்கள்.

author avatar
Gayathri