எலும்புகளுக்கு வலிமை தரும் கேரளா வெள்ளை உளுந்து புட்டு!
பயறு வகைகளில் அதிக சத்துக்களை உள்ளடக்கிய கருப்பு உளுந்தை தோல் நீக்கி அரைத்து செய்யப்படும் புட்டு கேரளாவில் ஸ்பெஷல் ஆகும்.
இந்த புட்டு எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கூடியதும்… உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதை சுவையாக செய்யும் முறை இதோ.
தேவையான பொருட்கள் இதோ…
*வெள்ளை உளுந்து – 1கப்
*பச்சரிசி அரிசி – 1/2 கப்
*தேங்காய் துருவல் – 3 கப்
*நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
*குங்குமப்பூ – 1/2 ஸ்பூன்
*ஏலக்காய்த் தூள் – 1 ஸ்பூன்
*நெய் – சிறிதளவு
*உப்பு – 1/2 தேக்கரண்டி
*முந்திரி பொடி – 1 கப்
செய்முறை…
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1 கப் வெள்ளை உளுந்தை போட்டு லேசான தீயில் வறுக்கவும்.
இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும். அடுத்து பச்சரிசி சேர்த்து அதேபோல் வறுத்துக் கொள்ளவும்.
இவை இரண்டையும் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இந்த பதத்தில் அரைத்தால் தான் புட்டு செய்ய முடியும்.
இந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிடித்துக் கொள்ளவும்.
இதை ஒரு இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த புட்டை ஒரு மிக்ஸியில் போட்டு ஒரு சூத்து விட்டு பாத்திரத்தில் போடவும்.
பிறகு அதில் தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை, முந்திரி பொடி, குங்குமம், ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்தால் சத்தான வெள்ளை உளுந்து புட்டு ரெடி.