சிறுநீரக கல்: ஒரு மணி நேரத்தில் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்க!

0
209
#image_title

சிறுநீரக கல்: ஒரு மணி நேரத்தில் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்க!

அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்தல், போதிய அளவு தண்ணீர் அருந்தாமை உள்ளிட்ட காரணங்களால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறது. இதனால் அதிக வலி மற்றும் எரிச்சல் உணர்வு சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும்.

சிறுநீரக கல்லை கரைக்க வழிகள்…

தேவையான பொருட்கள்…

*வாழைத்தண்டு
*தயிர்

செய்முறை…

வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

இதை ஒரு சுத்து விட்டு பிறகு தயிர் 3 ஸ்பூன் அளவு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி குடிக்கவும். இந்த வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தையும் கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது.

தேவையான பொருட்கள்…

*பீன்ஸ்

செய்முறை….

ஒரு கைப்பிடி அளவு பீன்ஸ் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

அடுத்து அதில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் வேக விடவும்.

பிறகு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் பீன்ஸை போட்டு அரைக்கவும். பீன்ஸ் நன்கு அரைப்பட்ட பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும்.

வாரத்தில் 2 முறை குடித்து வந்தால் சிறுநீரக கல் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்…

*ரணக்கள்ளி

செய்முறை…

2 அல்லது 3 ரணக்கள்ளி இலையை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் 7 தினங்களில் சிறுநீரகத்தில் இருந்த கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.