சிறுநீரக கல் கரைய பீர் போதுமா.. ஆண்களே உங்களுக்குத்தான்!! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!

0
57
kidney-stone-is-enough-beer-for-you-guys-find-out-now
kidney-stone-is-enough-beer-for-you-guys-find-out-now

சிறுநீரக கல் கரைய பீர் போதுமா.. ஆண்களே உங்களுக்குத்தான்!! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!

மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். சில பிரச்சனைகளுக்கு மதுவையை மருந்தாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ஆண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்றுதான் சிறுநீரக கல்.இதனை குணப்படுத்த பீர் குடித்தால் போதும் என்று இன்னும் பலரது ஆண்கள் மத்தியில் தற்போது வரை உள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை அமெரிக்கா செய்த ஒரு ஆய்வறிக்கையில் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் கிறிஸ்டைன் என்ற சுகாதார அமைப்பானது ஒரு ஆய்வு ஒன்று நடத்தியது. அதில் ஆண் மகன்கள் பலரும் சிறுநீர் கற்கள் கரைய பீர் குடித்தால் போதும் என்று நம்புவது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து அறிய இதனை நடத்தியுள்ளனர்.அந்த வகையில் சிறுநீரக கற்கள் கரைய மது அருந்துவதால் உடல் ரீதியாக பல உபாதைகளை சந்திப்பதாக இதில் தெரிய வந்துள்ளது. அதாவது சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் பீர் அல்லது அதீத மது அருந்துவதால் சிறுநீரகம் கூட செயலிழக்க நேரிடுமாம்.

அது மட்டுமின்றி இதன் தொடர்ச்சியாக உயர் ரத்த அழுத்தமும் ஏற்பட்டு விடும். அதனால் பீர் போன்றவை அருந்துவதால் சிறுநீரக கற்கள் கரையும் என்பது எந்த விதத்திலும் உண்மை அல்ல எனக் கூறியுள்ளனர். மதுபான பொருட்களில் டையூரிட்டிக்கள் அதிகம் உள்ளது. இது சிறுநீரக உற்பத்தி அதிகரிக்க செய்கிறது. ஆனால் உடல் நலத்திற்கு மிகவும் தீமையாக தான் இது அமைகிறது.

எனவே சிறுநீரக கல் பிரச்சினை உள்ள ஆண்கள் அதிகப்படியான நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி மது அருந்துவதால் உடலில் நீர்ச்சத்து குறைபடும். எனவே சிறுநீரக கல் கரைய வாழைத்தண்டு இளநீர் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம்.