சிறுநீரக கல்: அனைத்தும் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க!

0
188
#image_title

சிறுநீரக கல்: அனைத்தும் கரைந்து வெளியேற இதை ஒரு கிளாஸ் மட்டும் குடிங்க!

உடலில் இருக்கின்ற கழிவுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் கற்கள் உருவாவதை தான் கிட்னி ஸ்டோன் என்று அழைக்கின்றோம்.

இந்த சிறுநீரக கல் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் போதல் மற்றும் சிறுநீரை கழிக்காமல் அடக்கி வைத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது.

சிறுநீரக கற்களை கரைத்து சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மூக்கிரட்டை கீரையை பயன்படுத்துங்கள்.

மூக்கிரட்டை கீரையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இந்த கீரையை எவ்வாறு பயன்படுத்தி சிறுநீரக கல் பாதிப்பை குணமாக்கலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்…

*மூக்கிரட்டை கீரை
*பூண்டு
*வெங்காயம்

செய்முறை…

*ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

*அடுத்து அதில் ஒரு கைப்பிடி மூக்கிரட்டை கீரை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

*ஒரு உரலில் 2 பல் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் தோல் நீக்கியது போட்டு இடித்து கொதிக்கும் நீரில் சேர்த்து நன்கு காய்ச்சவும். 250 மில்லி தண்ணீர் 200 மில்லியாக வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு கிளாஸில் வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் சிறுநீரக தொற்று, சிறுநீரக கல் பாதிப்பு குணமாகும்.