முழங்கால் மூட்டு வலி ? இதற்கு “மஞ்சள் + நல்லெண்ணெயில்” தீர்வு இருக்கு!!

0
118
#image_title

முழங்கால் மூட்டு வலி ? இதற்கு “மஞ்சள் + நல்லெண்ணெயில்” தீர்வு இருக்கு!!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியவர்கள் மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது.

மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:-

உடல் பருமன், முதுமை, எலும்புகளில் அடிபடுதல், ஜவ்வு தேய்மானம், மூட்டு எலும்பு தேய்மானம்.

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் கிழங்கு

*நல்லெண்ணெய்

செய்முறை…

1 துண்டு மஞ்சள் கிழங்கை உரலில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மஞ்சள் கிழங்கு விழுதை சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மஞ்சள் விழுதை சேர்த்து கலக்கி அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்ததும் மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும் இடங்களில் தடவி மஜாஜ் செய்யவும். இதை இரவு நேரத்தில் தூங்கக் செல்வதற்கு முன் செய்து மறுநாள் காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூட்டு மற்றும முழங்கால் வலி விரைவில் சரியாகும்.

Previous articleதெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள்!!
Next articleஇது தெரியுமா? சூடு நீரில் இஞ்சி சேர்த்து பருகினால் என்ன நடக்கும்..!!