தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!

0
138
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 10 பாட்டி வைத்தியக் குறிப்புகள்..!!

1)பெருஞ்சீரகத்தை வறுத்து பொடித்து அதனுடன் 2 கிராம் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

2)வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர தலை முடி அடர்த்தியாக வளரும்.

3)ஒரு ஸ்பூன் ஓமம் மற்றும் ஒரு ஸ்பூன் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி
சிரங்கால் ஏற்பட்ட தழும்புகள் மீது பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளித்தால் தழும்புகள் மறையும்.

4)1 கைபிடி அளவு மணத்தக்காளி கீரையை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் பிரச்சனை சரியாகும்.

5)ஒரு ஸ்பூன் சீரகத்தை வறுத்து பொடி செய்து நீரில் கொதிக்க வைத்து குடித்து வர உடல் எடை குறையும்.

6)வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து மோரில் கலந்து பருகி வர வயிற்று வலி நீங்கும்.

7)தினமும் சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு’வர இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

8)100 மில்லி தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்கு காய்ச்சி சிரங்கு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அதன் பாதிப்பு நீங்கும்.

9)காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு தூள் மற்றும் கற்கண்டு சேர்த்து அருந்தினால் இருமல் குணமாகும்.

10)பிரண்டையை உலர்த்தி பொடி செய்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் மூட்டு வலி குணமாகும்.