தெரிந்து கொள்ளுங்கள்.. தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்..? 100% இயற்கை வைத்தியத்தில் தீர்வு!!
நம்மில் பலருக்கு தேள் கொடுக்கை பார்த்தலே பயம். இவையும் பூரான் போன்று விஷம் கொண்ட ஊர்வன வகை தான். தேள் நம்மை கொட்டினால் அது அதிக வலியை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. தேள் உயிருக்கும் ஆபத்தான ஒன்று இல்லை என்று சொல்லப்பட்டாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தேள் கடித்து விட்டால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை என்பது அவசியமான ஒன்றாகும்.
தேள் கடி அறிகுறி:-
*உடல் நடுக்கம்
*வாந்தி உணர்வு
*தேள் கடித்த இடத்தில் வலி மற்றும் எரிச்சல் உணர்வு
*உடல் முழுவதும் இரத்தம் தோய்ந்த நிறத்தில் இருக்கும்
தேள் கடி குணமாக வீட்டு வைத்தியம்…
1)அவுரி இலை மற்றும் கறிவேப்பிலையை சிறிதளவு மோருடன் கலந்து அரைத்து விழுதாக்கி தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
2)சிறிதளவு நெய்யுடன் இந்துப்பை சேர்த்து காய்ச்சி தேள் கொட்டிய இடத்தில் தடவினால் தேள் விஷம் முறியும்.
3)தும்பை இலைகளை சுத்தம் செய்து அரைத்து அதை தேள் கடித்த இடத்தில் தடவினால் விஷம் முறியும்.
4)வில்வாதி குளிகாவை தேள் கொட்டிய இடத்தில் மருந்தாக பயன்படுத்தலாம்.
5)எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
6)புளி கொட்டையை தரையில் வைத்து தேய்த்து சூடுபடுத்தி தேள் கொட்டிய இடத்தில் வைப்பதால் விஷம் முறிந்து விடும்.
7)சிறிதளவு வெற்றிலையை அரைத்து சாறு பிழிந்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் உடனடியாக தேள் விஷம் முறிந்து விடும்.