பெண்களே இனிமேல் வீட்டின் கதவை திறந்துவிட்டு தூங்காதீர்கள்!! திறந்து கிடந்த வீட்டில் அந்தமாதிரி  நுழைந்த நபர் அதிர்ச்சியான ஐடி ஊழியர்!!

Photo of author

By Amutha

பெண்களே இனிமேல் வீட்டின் கதவை திறந்துவிட்டு தூங்காதீர்கள்!! திறந்து கிடந்த வீட்டில் அந்தமாதிரி  நுழைந்த நபர் அதிர்ச்சியான ஐடி ஊழியர்!!

சென்னையில் திருமங்கலத்தில் வசித்து வந்த ஐடி பெண் ஊழியர் அருகில்  நிர்வாணமாக படுத்து தூங்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் திருமங்கலம் பகுதியில் 26 வயதான இளம்பெண் ஒருவர் தனியாக அறை  எடுத்து தங்கி உள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் அரசு வேலைக்காகவும் படித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இவர் இரவு தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் எழுந்து பார்த்தபோது தனக்கு அருகில் உடலில் எந்த வித துணியும் இன்றி நிர்வாணமாக ஆண் ஒருவர் படுத்திருப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் பயந்து போய் கூச்சலிட்டுள்ளார். உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து  மது போதையில் ஆடை இன்றி படுத்திருந்தவரை எழுப்பி திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி வயது 51, என்பதும் பொள்ளாச்சியில் அரசு வனவராக வேலை செய்வதும் விசாரணையில் தெரிய வந்தது.

தனது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்னை திருமங்கலம் பொன்னுசாமி வந்துள்ளார். ஐடி பெண் தங்கி உள்ள அதே குடியிருப்பில் ஐஏஎஸ் அகாடமியில் படிப்பதற்காக தங்கி உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க வந்துள்ளார். இரவு அங்கேயே தங்கியிருந்தவர் நள்ளிரவில் மொட்டை மாடியில் இருந்து போதையுடன் கீழே இறங்கி வந்த அவர் உறவினரிஅறைக்குச் செல்வதற்கு பதிலாக மாறி திறந்து கிடந்த ஐடி பெண் ஊழியர் அறைக்குச் சென்று நிர்வாணமாக படுத்து உறங்கியது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுசாமியை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.