பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!!

0
53
#image_title

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!!

பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று தான்.28 நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒவ்வொரு பெண்ணின் உடலுக்கு ஏற்றவாறு மாதவிடாய் ஏற்படுகிறது.மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு,வயிற்று வலி உள்ளிட்டவைகளால் உடல் சோர்ந்து விடுகிறது.

உடல் சூடு அதிகம் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டை தணிப்பதில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அதேபோல் அதிகளவு நீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்று.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை குணமாக்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தி அற்புத மூலிகை தேநீர் செய்து பருகினால் போதும் நல்ல தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சீரகம் – 3/4 தேக்கரண்டி

*சின்ன வெங்காயம் – 2

*பூண்டு – 3 பற்கள்

*வெற்றிலை – 2

*மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:-

ஒரு உரலில் சின்ன வெங்காயம் 2,பூண்டு பற்கள் 3 சேர்க்கவும்.பின்னர் சீரகம் 1/2 முதல் 3/4 தேக்கரண்டி சேர்க்கவும்.அதோடு காம்பு நீக்கிய 2 வெற்றிலை சேர்த்து நன்கு இடித்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.அவை கொதிக்கும் தருணத்தில் இடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்கும் தருணத்தில் மஞ்சள் தூள் 1 சிட்டிகை அளவு சேர்த்து கொதிக்க விடவும்.1 1/4 டம்ளர் தண்ணீர் சுண்டி 3/4 டம்ளராக வந்தவுடன் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படும் பொழுது இந்த பானத்தை பருகினால் நல்ல தீர்வு கிடைக்கும்.