Saturday, October 19, 2024
Home Blog Page 5002

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

0

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. நடைபெற்ற உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பல தடைகளை தாண்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதன்மை இடத்தை பிடித்திருந்தாலும் அரையிறுதியில் நியூஸிலாந்துடன் விளையாடி தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய நியூஸிலாந்து 239 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் அடுத்த நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது பின்பு விளையாடிய இந்தியா முதல் 3 விக்கெட்களை மளமளவென விட்டு கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தது.

பின்பு சீரான இடை வெளியில் தொடர்ந்து அடுத்தடுத்த விக்கெட்களை பறிகொடுத்தது. அடுத்து தோனி ஜடேஜா இணை விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. பின்பு ஜடேஜா அவுட் ஆகிய பின் தோனியும் 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதனால் எதிர்பாராத விதமாக இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதை அடுத்து தோனியின் ஆட்டம் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. இதையும் பொருட்படுத்தாமல் அவரது ரசிகர்கள் தோனியின் ஆட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு இடையில் இந்த உலக கோப்பையில் தோனி ஓய்வு பெறுவதாக பலர் கூறினார்கள். இதனால் அடுத்து யார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்பதில் குழப்பம் நிலவியது.

இதை அடுத்து பிபிசிஐ வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அதாவது இனி வரும் ஆட்டங்களில் விக்கெட் கீப்பர் தேர்வுகளில் தோனி முதன்மை இடத்தில் இருக்க மாட்டார். ரிசப் பண்ட் முதன்மை இடத்தில் இருப்பார் என தெரிவித்தார்.

மேலும் தோனி தனது ஓய்வினை அவரே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் அறிவித்தார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இந்த பழம் நீரிழிவு நோய்க்கு மருந்தா !

0

இன்றைய நவீன உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிகம். இதற்கு தேவையான வைத்தியம் நமது வீட்டிலே இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

இரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிப்பதன் காரணத்தால் சக்கரை எனப்படும் நீரிழிவு நோய் உண்டாகிறது.இதில் இரண்டு வகை நீரிழிவு நோய்கள் காணப்படும்.அவை டைப் 1 மற்றும் டைப் 2 ஆகும்.

வீதிக்கு ஒருவர் என நிலை மாறி இப்போது, வீட்டுக்கொருவர் நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோய் தொடர்பான சில அடிப்படை தகவல்களை இங்கே பகிர்கிறோம்

இரண்டு விதமான நீரிழிவு நோய்கள் உள்ளன.

முதல் வகை நீரிழிவு நோய் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்.

முதல் வகை நீரிழிவு நோயை தடுக்க முடியாது மற்றும் அரிதாக வரக் கூடியது.

இரண்டாம் வகைதான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது.

பிரிட்டன் கணக்குப்படி அந்நாட்டில் நீரிழிவு நோய் இருப்பவர்களில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பேருக்கு இந்த இரண்டாம் வகை நீரிழிவு நோய்தான் உள்ளது.

உடல் எடை அதிகரிப்பது, மாறி வரும் உணவுப் பழக்கம், நம் வாழ்க்கை முறைதான் இந்த வகை நீரிழிவு நோய்க்கு காரணம்.

இதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது.

இதில் என்ன நல்ல விஷயம் என்கிறீர்களா? இந்த வகை நீரிழிவு நோயை 80 சதவிகிதம் தடுக்க முடியும்.

நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி?

இவைகளுக்கு நமது வீடுகளில் வைத்தியம் உள்ளது.அவை,

நாவல்பழம்:
நாவல் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும்.நாவல்பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது.நீரிழிவு நோயாளிகள் தினமும் இதன் பழத்தை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் நல்ல கட்டுக்குள் வரும்.

இதன் விதை நல்ல மருந்தாக நீரிழிவு நோய்க்கு உதவும். இதன் விதைகளை நன்கு காயவைத்து பின்பு பொடியாக்கி வெந்நீரில் கலந்து பருகி வர நல்ல முன்னேற்றம் காணலாம்.

எனவே நாவல் பழம் உண்ட பிறகு அதன் விதையை தூக்கி வீசாமல் சேகரித்து பயன் அடையவேண்டும்.

சர்க்கரை நோய் குறைய பாட்டி வைத்தியம்,

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து,

சர்க்கரை வியாதிக்கு எளிய மருத்துவம்

சர்க்கரை நோயின் நிரந்தர தீர்வு,சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்

சர்க்கரை நோய் நாட்டு வைத்தியம்

கருஞ்சீரகம் சர்க்கரை நோய்,சர்க்கரை நோய் வர காரணம்

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இனியும் நடவடிக்கை எடுக்க தவறினால் அது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டும் ராமதாஸ்

0

இனியும் நடவடிக்கை எடுக்க தவறினால் அது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டும் ராமதாஸ்

பாமகவின் நெடுநாள் கோரிக்கையான மது விலக்கின் அவசியம் குறித்தும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மது என்பது எவ்வளவு மோசமான அழிவு சக்தி என்பதற்கு ஏற்கனவே ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உண்மைகளை அறிந்த பிறகும் மதுவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகவே அமையும்.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ஓர் அங்கமான தேசிய போதை மீட்பு சிகிச்சை மையத்தின் சார்பில், ‘‘இந்தியாவில் மது அருந்துவதால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள்’’ என்ற தலைப்பில் தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. மது அருந்துவதால் மனிதர்களுக்கு தோன்றும் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் சாலை விபத்துகள் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இந்த வகையில் மட்டும் 2011 முதல் 2050 வரையிலான 40 ஆண்டுகளில் 25.80 கோடி ஆண்டுகள் மனித வாழ்நாள் பறிக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவில் ஒருவரின் சராசரி வாழ்நாள் 60 ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டால், 64.50 லட்சம் பேர் 20 வயதுக்குள் உயிரிழக்கின்றனர். அதேபோல், மது அருந்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளின் பொருளாதார மதிப்பு மட்டும் ரூ.97.89 லட்சம் கோடி என்று எய்ம்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

மது ஒழிக்கப்பட வேண்டும்; மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மதுவுக்கு எதிராக 38 ஆண்டுகளாக நான் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மதுவிலக்கை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும், அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கு காரணம், அதன் மூலம் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் மட்டும் தான். உண்மையில் மதுவால் கிடைக்கும் வருமானத்தை விட, மது பாதிப்புகள் அதிக இழப்பை ஏற்படுத்துகின்றன என்பது எய்ம்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மது விற்பனையால் அரசுக்கு வரி வருமானம் கிடைப்பது ஒருபுறமிருக்க அதையும் தாண்டி, ஆண்டுக்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.45% பொருளாதார இழப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் மதுவால் கிடைக்கும் வருமானத்தைத் தாண்டி ஆண்டுக்கு ரூ.2.64 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.31,500 கோடி மது விற்பனை மூலம் வருமானம் கிடைத்தாலும், அதையும் தாண்டி ஆண்டுக்கு ரூ.24.94 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு மதிப்புகள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சியால் ஏற்கனவே கூறப்பட்டவை தான். இப்போது எய்ம்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த தகவல்கள் மறுஉறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் கூற விரும்புவது ஒரு விஷயத்தை தான். மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் மகிழ்ச்சியடையக்கூடிய ஒன்றல்ல; அது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு இணையான செயல் என்பது தான் அது. ஒரு மாநிலத்தின் உண்மையான சொத்து என்பது வலிமையான, திறமையான மனிதவளம் தான். ஆனால், விலைமதிப்பற்ற மனித வளத்தை மது சீரழிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய இளைஞர் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறது. இதனால் வளர்ச்சிக்குத் தேவையான மனித வளம் கிடைக்காமல் அனைத்து துறைகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்க்காமல் மதுவிற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிப்பதை மட்டும் கண்டு மகிழ்வது சரியல்ல.

அதேநேரத்தில் மதுவை ஒழிப்பதன் மூலம் மனித வாழ்நாள் 55.20 கோடி ஆண்டுகள் அதிகரிக்கக்கூடும். அதுமட்டுமின்றி, மனித உழைப்பு அதிகரிக்கும் என்பதால் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு பெருமளவில் அதிகரிக்கும். இதனால், இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். நாட்டில் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும் இது உதவும். மதுவால் மோசமான தீமைகள் ஏற்படும்; மதுவிலக்கால் நன்மைகள் ஏற்படும் எனும் நிலையில், இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுப்பது தான் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும். எனவே, தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும். இது குறித்து விவாதித்து. நல்ல முடிவை எடுத்து இந்தியாவை உலகின் மது இல்லாத முதல் நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த புதிய அறிவிப்பு

0

பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த புதிய அறிவிப்பு

சென்னை; மாணவர்களுக்கு இலவச அய்வு கூடம் செங்கோட்டையன் அறிவிப்பு.

சென்னையில் நடந்த பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் எனவும், அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆய்வு கூடம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் வரும் டிசம்பர் மாதத்தில் அனைத்தும் பள்ளிகளிலும் கணினி மையம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக இதற்காக 20 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.இது மாணவர்களின் கணினி திறமையையும் அறிவு சார்ந்த வளர்ச்சியும் மற்றும் முன்னேற்றதையும் மாணவர்களுக்கு அளிக்கும் எனவும் கூறினார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

கர்நாடகா குமாரசாமி ஆட்சி தப்புமா? இன்று இறுதி தீர்ப்பு!

0

கர்நாடகா குமாரசாமி ஆட்சி தப்புமா? இன்று இறுதி தீர்ப்பு!

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம், அரசுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கச் செய்ய சபாநாயகர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இன்று காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக உத்தரவிட்டனர். குமாரசாமி அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் ஆளும் அரசின் பலம் 101ஆக குறையும். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சி கவிழும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பெங்களூருவில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடினார். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு பாஜக எம்.எல்.ஏக்கள் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எடியூரப்பா இசை நிகழ்ச்சியை ரசித்தார்

தெறிக்கவிடும் சந்தானத்தின் A1 டீஸர்! டீஸர் உள்ளே..

0

சந்தானம் நடித்துள்ள ஏ1 படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது.

நாளைய இயக்குனர் சீசன் 4ல் டைட்டில் வென்ற ஜான்சன் இயக்கியுள்ள படம் ஏ1. சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் தாரா நடிக்கிறார்.

ஏ1 திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது.


‘இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’ எனும் டோனில் படத்தில் பெயர் பலகைப் போடப்படுகிறது. டீசர் முழுவதுமே அதே டோனில் தான் இருக்கிறது. ‘உலக சினிமா வரலாற்றில் முற்றிலும் மாறுபட்ட என வாசிக்க ஆரம்பிக்கும்போதே, போதும் நிறுத்து அவ்வளவு பில்டப் எல்லாம் தேவையில்ல.
இது ஒரு லோக்கல் பையன், அஹ்ரகாரத்து பொண்ண லவ் பண்ற கதை தான்’னு அவங்கள அவங்களே கலாய்த்துக்கொள்கிறார்கள்.

‘ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை நிரூபிக்கும் அஹ்ரகாரத்து மாமி, மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்’, ‘கறிக்கொழம்புல எழுப்பு உன் கதையே வேணாம் கிளம்பு’ என்பது போன்ற சந்தானத்தின் தெறிக்கவிடும் கவுண்டர்கள் நிரம்பி வழிகிறது. டீசரை பார்க்கும் போது ஒரு காமெடி விருந்து தயாராகியிருப்பது மட்டும் உறுதி.

அமமுக நிர்வாகிகள் உளவுத்துறை மூலம் மிரட்ட படுகிறார்களா! சேலத்தில் பேசிய தினகரன்

0

அமமுக நிர்வாகிகள் உளவுத்துறை மூலம் மிரட்ட படுகிறார்களா! சேலத்தில் பேசிய தினகரன்

மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பிறகு தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் வெளியேறி அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். இப்படியே தொடர்ந்தால் கட்சி நிலைக்காது என்று உணர்ந்த டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச திட்டமிட்டார்.

அந்த வகையில் தருமபுரி, சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். சேலம் மாவட்ட அமமுகவின் சார்பில் கொண்டலாம்பட்டி அடுத்த பூலாவாரி பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் தினகரன் கலந்துகொள்ளும் முதல் கூட்டம் என்பதால் இங்கு தங்களுடைய பலத்தைக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, நிர்வாகி ஒவ்வொருவரும் தலா 100 பேரை கூட்டத்துக்கு அழைத்து வர அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், நிர்வாகிகள் கூட்டம் என்பது செயல்வீரர்கள் கூட்டமாக மாறி திருமண மண்டபமே நிரம்பி வழிந்ததிருக்கிறது.

இந்த கூட்டத்தில் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன், “ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி அவர்களே… உங்களுடைய அதிகாரம் எதுவரை என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் சின்னம்மாவிடம் தவழ்ந்து தவழ்ந்து எப்படி பதவி பெற்றீர்கள் என்பதும் தெரியும். அமமுகவினர் நிர்வாகிகள் மீது இருக்கும் பழைய வழக்குகளை தூசுத் தட்டி உளவுத் துறையினர், போலீஸ் மூலம் மிரட்டி உங்கள் பக்கம் இழுத்துக் கொள்கிறீர்கள். இந்த பிள்ளை பிடிக்கும் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று காட்டமாகக் கூறினார்.

இறுதியாகப் பேசிய தினகரன், “தமிழகத்தில் அமமுக அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் ஆணிவேராக இந்த இயக்கத்தைத் தூக்கிப் பிடித்திருக்கும் தொண்டர்கள்தாம். இதனால்தான் அமமுகவினரை வலைவீசி பிள்ளை பிடிப்பவர்களைப் போல ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பிடித்துக்கொண்டிருக்கிறது. அமமுக ஆளுங்கட்சியாக வளர்ந்துவிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்” என்று பேசியவர்,

மேலும் “தலைமைக் கழகம் ஆரம்பித்து கிளைக் கழகம் வரை நமது நிர்வாகிகளை உளவுத் துறை வைத்து மிரட்டி இழுக்கிறார்கள். தொழில் செய்பவர்களைக் குறிப்பாக காண்டிராக்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை மிரட்டியும், உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பளிப்போம் என ஆசைவார்த்தை கூறியும் தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். பலவீனமாக இருப்பவர்கள் அவர்கள் பக்கம் சென்றுவிடுகிறார்கள்” என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “கட்சியில் சிலர் தங்களது சுயவிருப்பத்தின் பேரில் வெளியேறுகிறார்கள். இது தொண்டர்களால் வழிநடத்தப்படும் இயக்கம். எந்த கொம்பனாலும் அமமுகவை அழிக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

துணிந்தது தமிழகம்! பணிந்தது பாஜக!

0

ஞாயிற்று கிழமை அன்று தபால் துறை தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.

கடந்த காலத்தில் தமிழ் மொழியில் நடத்தப்பட்ட இந்த தேர்வு, இந்த முறை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டதால், தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தது.

இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்யவேண்டும் என தமிழக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் நாடாளுமன்ற அவை நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவை கூடியதும், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எழுந்து இந்த தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் இனிமேல் தபால் துறையில் நடத்தப்படும் தேர்வுகள் அந்ததந்த மாநில மொழிகளிலே நடத்தலாம் என ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.

அஞ்சல் துறை தேர்வு ரத்து! மாநிலங்களவையில் அசத்திய அதிமுக எம்.பி.க்கள்! பணிந்தது பாஜக அரசு

0

அஞ்சல் துறை தேர்வு ரத்து! மாநிலங்களவையில் அசத்திய அதிமுக எம்.பி.க்கள்! பணிந்தது பாஜக அரசு

கடந்த 14 ஆம் தேதி ஞாயிற்று கிழமை நடைபெற்ற அஞ்சல் துறை காலி பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் அஞ்சல் துறைக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் துறைக்கு நடந்த தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.‍ இதனால் தொடர்ந்து 4 முறை ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய கடந்த ஞாயிற்று கிழமையன்று நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது. இது வரை நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழகத்தில் பங்கேற்போர் தமிழ் மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்வில் தமிழ் மொழியில் எழுத முடியாது, ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று அறிவிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஏற்கனவே நடத்திய அஞ்சல் துறைக்கான தேர்வில் தமிழ் மொழியில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது குறித்த சர்ச்சை முடிவடையாத நிலையில் தமிழ் மொழியை புறக்கணித்ததை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தேர்வை நடத்தலாம்.ஆனால் முடிவை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் இன்று ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. இன்று காலை ராஜ்யசபா கூடியதும், தபால் துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி அதிமுகவை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர்.மேலும் தபால்துறை தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, அவைத்தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவின் இருக்கையை முற்றுகையிட்டும் அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்கலாம்: அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள நாடு எது தெரியுமா?

இதனால், கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவையை நண்பகல் வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.
மீண்டும் அவை கூடிய போதும் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ராஜ்யசபா 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ராஜ்யசபா கூடிய போது, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இந்தி, ஆங்கிலம் மொழியில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும்.மேலும் தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். இதன் பிறகே ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டிருந்த தமிழக அதிமுக எம்.பி.க்கள் அமைதியாகினர்.

இதையும் படிக்கலாம்: நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல்

0

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இது குறித்து அவர் பேசியதாவது:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினைப் பற்றி, நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட தமிழகத்தின் உறுப்பினர்கள் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கின்றார்கள். அதற்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘தமிழகத்தில் மீத்தேன் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

7 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டிற்கு மேலும் 23 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் மைனிங் லைசென்ஸ் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று கூறியிருக்கின்றார்.

ஏற்கனவே இதே அவையில் நான் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அப்பொழுது பதிலளித்துப் பேசிய தொழிற்துறை அமைச்சர், ‘‘தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு உறுதியாக அனுமதி அளிக்காது விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை’’ என்று இந்த பேசி அது பதிவாகியிருக்கின்றது. அதுமட்டுமல்ல, திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவும் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இதனைப் பற்றி பேசியுள்ளார்.

அப்பொழுது பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர், ‘‘தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதியே கிடையாது. ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியும் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை. இதுதான் உண்மை’’ என்று உறுதியாக பதில் தந்திருக்கிறார். எனவே, நான் கேட்க விரும்புவது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்பதை தமிழக அரசு ஒரு கொள்கை முடிவாக எடுத்து இந்த அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அறிவிப்பது மட்டுமல்ல அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தால்தான் அங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சு அடைய முடியும். எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்ற ஒரே கொள்கை முடிவினை இந்த அரசு எடுக்க வேண்டும். அதுவும் இந்தக் கூட்டத்தொடரில் எடுத்திட வேண்டும்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தந்திருக்கக்கூடிய பதிலின் அடிப்படையில்தான், நான் மீண்டும் – மீண்டும் கேட்கின்றேன். டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு ஒரு நிம்மதி வரவேண்டும் என்று சொன்னால் உடனடியாக ஒரு கொள்கை முடிவு எடுத்து அதை நீங்கள் அறிவித்து, இந்த அவையில், இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் பேசினார்.