உணவே மருந்து:! மணத்தக்காளி கீரையை இப்படியும் அரைத்து சப்பிடலாம்!!

உணவே மருந்து:! மணத்தக்காளி கீரையை இப்படியும் அரைத்து சப்பிடலாம்!!

அல்ஸ்ர் வாய்புண் உள்ளவர்களுக்கு மணத்தக்காளி கீரை அருமருந்தாக பயன்படுகிறது.கீரையை சாப்பிட்ட அழுத்து போனவர்களுக்கும் இரவில் சட்னி செய்பவர்களுக்கும், சற்று மாறுதலாக இந்த மணத்தக்காளி சட்னியை செய்து கொடுத்துப் பாருங்கள்.எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை: ஒரு கைப்பிடி அளவு அல்லது ஒரு கப் தக்காளி:3 சின்ன வெங்காயம்: 5 to10 பூண்டு: 3 பல் சீரகம்&மிளகு: ¼ டீஸ்பூன் இஞ்சி:சிறிதளவு வரமிளகாய்: தேவைக்கேற்ப புளி: சிறிதளவு கருவேப்பிலை: ஒரு கொத்து தேங்காய்:1 மூடி செய்முறை: … Read more

சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

சாப்பிட்ட தட்டில் இதை செய்தால் தரித்திரம் பிடிக்கும்?

நாம் முறையாக சாப்பிடுவதற்கும் நம் முன்னோர்கள் வழிமுறை வகுத்து வைத்துள்ளனர்.ஏன் இந்த திசையில் சாப்பிட்டால் இந்த பலன்கள் என்றும் நமக்கு கணித்துக் கூறியுள்ளனர்.நம் உடலில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களை கூட முன்கூட்டியே அறிந்து அதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.எவ்வாறு சாப்பிட வேண்டும்? சாப்பிடும் போது செய்யக்கூடியவை?கூடாதவை? பற்றி நம் முன்னோர்கள் கூறியதில் சிலதைக் காணலாம். தனி ஒருவர் சாப்பிடும் பொழுது சரியான திசையில் உட்கார்ந்து உணவு உட்கொள்ள வேண்டும். எந்த திசையில் சாப்பிட்டால் … Read more

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி? தேங்காயை அதிகம் உபயோகித்தால் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து மாரடைப்பு வரும் என்ற தவறான செய்திகள் பரவியிருக்கிறது. ஆம்! தேங்காயில் கொழுப்பு உள்ளது தான். எப்பொழுது, சமைக்கும் பொழுது மட்டும் தான் அதனுடைய சக்தி கொழுப்பாக மாறி விடுகிறது. தேங்காய் தாய்ப்பாலுக்கு ஈடான ஒரு அமிர்தம் ஆகும். தேங்காய்க்கும் நமக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.அது என்னவென்றால் நாம் பத்து மாதம் கருவில் இருந்து வெளிவருகிறோம். அதே போல் தேங்காய் … Read more

ராஜபோகம்

ராஜபோகம்

ராஜபோகம் முதலில் எல்லாம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே இட்டிலியும் தோசையும் காண முடியும். எங்க வீட்ல இட்லி செஞ்சிருக்காங்க என பக்கத்து வீட்டு சிறுவர்களை அழைத்து சாப்பிடச் சொல்லும் அளவிற்கு பெரிய விஷயம் இட்லி,தோசை என்பது.   அன்றைய காலத்தில் சாதாரண மக்களின் உணவானது வரகு, தினை, கம்பஞ்சோறு, கேழ்வரகு போன்ற தானியங்களின் கஞ்சி மட்டுமே . அரிசி சோறு என்பது ராஜபோகத்தில் ஒன்று. ராஜபோகம் என்றால் மன்னர்கள் மட்டும் சாப்பிடக்கூடிய உணவாக இருந்தது.   நெய், … Read more

இப்படி செய்தால் சாம்பார் இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது!!பிரிட்ஜ் தேவை இல்லை!

இப்படி செய்தால் சாம்பார் இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது!!பிரிட்ஜ் தேவை இல்லை!

தாய்மார்கள் அனைவரும் பருப்பு சாம்பாரை செய்தவுடன் புளித்து விடும் என்று ஃப்ரிட்ஜில் எடுத்து வைப்பார்.இந்த ட்ரிக்ஸ்-சை யூஸ் பண்ணினால் இரண்டு நாட்கள் ஆனாலும் பருப்பு குழம்பு புளித்துப் போகாது கெட்டும் போகாது.ஒரு முறை இதுபோன்று செய்து பாருங்கள். 1.பருப்பை வேகவைக்கும் பொழுது குக்கரில் வேக வைக்காமல் பாத்திரத்தில் வேக வைத்து கடைந்தால் வழவழப்பு தன்மை நீங்கி எளிதில் பருப்பு குழம்பு புளித்து போவதை தடுக்கும். 2.பருப்பு சாம்பாரை தாளிக்கும் பொழுது புளி கரைச்சல் ஊற்றாமல் தாளித்த சாம்பார் … Read more

முருங்கை நீருடன் தேன் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசயம்!!

முருங்கை நீருடன் தேன் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசயம்!!

ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை இந்த வயிற்று தொப்பையை குறைப்பதுதான்.அதுவும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பேறுக்குப் பிறகு போடும் இந்த தொப்பையை குறைக்க ஏதேதோ செய்து பார்த்திருப்பார்கள். இதேபோன்றுதான் ஆண்களும் வயிற்றுத் தொப்பையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளையும், மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் பெரிதாக பயன் கிடைக்கவில்லை என்று ஆண் பெண் வருத்தப்படுகின்றனர். இவ்வளவு கடினமான இந்த தொப்பையை குறைக்க இதோ 3 எளிய வழி! அடிவயிற்று தொப்பை … Read more

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி ! எண்ணியதை எண்ணியவாறே நிறைவேற்றும் விநாயகப்பெருமானை வணங்குங்கள்!

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி ! எண்ணியதை எண்ணியவாறே நிறைவேற்றும் விநாயகப்பெருமானை வணங்குங்கள்!

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி ! எண்ணியதை எண்ணியவாறே நிறைவேற்றும் விநாயகப்பெருமானை வணங்குங்கள்! சங்கடஹர சதுர்த்தி மந்திரம்: ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா பொது பொருள்: உனது பக்தர்கள் வேண்டும் வரத்தை வரமளிக்கும் விநாயகப் பெருமானே உன்னை வணங்குகிறேன். முழு முதற் கடவுளும் நீ, பூத கணங்களுக்கெல்லாம் தலைவனும் நீ. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்தருள்வாய் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.202

நாள் : 07.08.2020

தமிழ் மாதம்: ஆடி 23 வெள்ளிக்கிழமை.

நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00
எம கண்டம்: மதியம் 03.00 முதல் 04.30
குளிகன்: காலை 07.30 முதல் 09.00 வரை.

திதி:

சதுர்த்தி திதி இரவு 02.06 வரை அதன் பின் தேய்பிறை பஞ்சமி.

நட்சத்திரம் :

பூரட்டாதி பகல் 1.33 மணி வரை அதன் பின் உத்திரட்டாதி.

பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.30 வரை பின்பு சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் ஒரு சில தொந்தரவுகள் வரக்கூடும்.உறவினர்கள் உங்கள் வீட்டில் ஏற்படும் சுபகாரியங்களில் தடை செய்வார்கள். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்புத் தந்து வந்தால் வீண் பிரச்சினைகள் குறையும். தொழிலில் சற்று முன்னேற்றம் ஏற்படும். தொந்தரவுகள் வரும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மிகவும் புத்துணர்வான நாளாகும்.எல்லா வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள்.உங்களின் முயற்சிக்கு உங்களது குடும்பத்தார் பக்கபலமாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.தொழில் ரீதியாக பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். வருமானம் பெருகும் நாள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களது உடல் நலம் மிகவும் சிறப்புடன் காணப்படும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டு.அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நபர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுகள் கைகூடும். பணவரவு தட்டுப்பாடின்றி வரும். ஆரோக்கியமான நாள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே இன்று ஒரு புது தெம்புடன் பணியாற்றுவீர்கள்.தொழிலில் எதிர்பார்ப்பது கிடைக்காவிட்டாலும் பெருமளவு பாதிப்புகள் வராது.குடும்பத்தில் ஒரு சில தொந்தரவுகள் வந்து மறையும். பணவரவு ஓரளவு வரும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் எதை செய்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மற்றவர்களுடன் பேசும்பொழுது பார்த்துப் பேசுங்கள். வியாபாரத்தில் பெரிய தொகையை செலுத்தாதீர்கள். பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்படும் நாள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இன்று பிள்ளைகள் வழியில் உங்களுக்கு நற்செய்தி வரும்.திருமணப் பேச்சுக்கள் கைகூடி நற்பலனைத் தரும். குடும்ப பிரச்சினை மறையும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். அனுகூலமான நாள்.

துலாம்:

துலா ராசிகாரர்களே இன்று உங்களுக்கு மிகவும் அமோகமாக நாள் என்றே கூறலாம்.தொழில், புகழ்,செல்வாக்கு என அனைத்தும் பெருகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் பலனைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுக்கள் நன்மை தரும். அமோகமான நாள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய உடல் ரீதியாக ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு செலவு நேரிடலாம். வரவை விட செலவு அதிகமாகும்.அலுவலகத்தில் மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வாய்ப்பு வந்து நிற்கும். எதிர்பார்த்த உதவி கிட்டும். நிதானமாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இன்று செய்யும் எந்த காரியத்திலும் இன்று கவனம் செலுத்துங்கள். உற்றார் உறவினர்களிடம் சண்டை போடுவதை தவிர்க்கவும்.நண்பர்களின் பேச்சுக்களை கேளுங்கள். அது ஒரு நல்ல தீர்வாக அமையும்.வெளியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை சீக்கிரம் கை வந்து சேரும். வாய்ப்புகள் அமையும் நாள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார நிலை உயரும்.உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி வீடு வந்து சேரும்.தொழிலில் வேலை பார்ப்பவர்களுக்கு அவரவர் செய்த வேலைக்கு உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார வகையில் ஒரு சில நெருக்கடிகள் வரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் தாமதமாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். அனுகூல பலன்கள் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். நெருக்கடியான நாள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இன்று நீங்கள் பொறுப்புடன் செயல்பட்டால் முக்கியமான ஒரு சில பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். உறவினர்களின் மகிழ்ச்சியால் வீடு கலைகட்டும். சுபகாரியங்கள் நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உத்யோகம் ரீதியாக ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வர வாய்ப்பு வரும்.

இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது!

இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது!

இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது! தக்காளி இரு விதமாக நமது தோல்களுக்கு பயன்படுகிறது. ஒன்று பொலிவைத் தருகிறது. மட்டுமின்றி மென்மையான சருமத்தையும் கொடுக்கிறது. தக்காளியை நம் முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகத்தை பொலிவாக்குகிறது மற்றும் முகப்பருக்களை குறைக்கிறது மற்றும் வெயிலில் சென்று தோல் கருமையடையும் போது அதை மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டுவர தக்காளி பயன்படுகிறது. தக்காளியில் விட்டமின் C இருப்பதால் அது நம் முகத்திற்கு … Read more

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு!

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு!

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு! உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கடல்வாழ் உயிரினங்களில் உள்ளன. கடல்வாழ் உயிரினமான இறாலில் அதிக புரதச் சத்துக்களும் வைட்டமின் D-யும் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட் மிக மிக குறைந்த அளவில் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்போருக்கு இது மிகச் சிறந்த உணவாகும். கண்பார்வை சிதைந்து போவதற்கு இறால் சாப்பிட நல்ல தெளிவான பார்வை கிடைக்கும். சுவையான நாக்கில் எச்சில் ஊறும் இறால் … Read more