தீராத சளி பாதிப்பை முழுமையாக சரி செய்ய உதவும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

Photo of author

By Divya

தீராத சளி பாதிப்பை முழுமையாக சரி செய்ய உதவும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

காலநிலை மாற்றத்தால் மட்டுமின்றி ஒரு சிலருக்கு இயல்பாகவே சளி, காய்ச்சல் பாதிப்பு வரக் கூடிய ஒன்று தான். இந்த சளி, காய்ச்சல் பாதிப்பில் இருந்து பெரியவர்கள், குழந்தைகள் யாரும் தப்பி விட முடியாது.

சளி, காய்ச்சல் பாதிப்பு நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வைத்தியம் மேற்கொண்டால் அவற்றிற்கு உடனடி தீர்வு கிடைக்கும். சளி, காய்ச்சல் பாதிப்பிற்காக 1000 கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

*மிளகு – 5

*இஞ்சி – 1 துண்டு

*இலவங்கம் – 5

*துளசி இலை – 10

*பட்டை – 1 துண்டு

*தேன் – 1/2 தேக்கரண்டி

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் தோல் நீக்கி இடித்த இஞ்சி 1 துண்டு, இலவங்கம் 5, மிளகு 5, பட்டை 1 துண்டு, 10 துளசி சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகவும். இந்த பானம் சளி, காய்ச்சலை சில மணி நேரத்தில் குணமாக்கும் தன்மை கொண்டது. அதுமட்டும் இன்றி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.