முகத்தில் உள்ள பருக்களை நீக்கும் மேஜிக் ஜூஸ்!! இதை எவ்வாறு தயார் செய்வது?

0
236
#image_title

முகத்தில் உள்ள பருக்களை நீக்கும் மேஜிக் ஜூஸ்!! இதை எவ்வாறு தயார் செய்வது?

முக அழகை கெடுக்கும் பருக்களை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

தீர்வு 01:-

1)வேப்பம் பூ
2)வேப்பிலை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/4 கைப்பிடி அளவு வேப்பம் பூ மற்றும் வேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து வடிகட்டி குடித்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் முழுவதுமாக மறையும்.

தீர்வு 02:-

1)கேரட்
2)பீட்ரூட்
3)தக்காளி

செய்முறை:-

ஒரு கேரட்,பாதி பீட்ரூட் மற்றும் பாதி தக்காளி பழத்தை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து குடித்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் எளிதில் மறையும்.

தீர்வு 03:-

1)கற்றாழை ஜெல்

செய்முறை:-

ஒரு துண்டு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.இதை மைய்ய அரைத்து குடித்தால் முகத்தில் உள்ள பருக்கள் சில தினங்களில் மறைந்து விடும்.

Previous articleகாலத்திற்கும் உதவும் பாட்டி வைத்தியம்!! இதை செய்தால் மருத்துவ செலவு இனி இல்லை!!
Next articleவங்கி வேலை: மாதம் ரூ.78000/- ஊதியம்! டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!