மார்பில் தேங்கி இருக்கும் சளி கபம் நீங்க மூலிகை கசாயம் செய்து குடிங்க!

0
245
#image_title

மார்பில் தேங்கி இருக்கும் சளி கபம் நீங்க மூலிகை கசாயம் செய்து குடிங்க!

சாதாரணமாக உருவாகும் சளி கவனிக்க தவறினால் நாளடைவில் மார்பில் தேங்கி தீராத தொல்லையாக மாறிவிடும். இந்த சளி கபம் கரைந்து வெளியேற மூலிகை கசாயம் செய்து குடிப்பது நல்லது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கப்படி மூலிகை கசாயம் செய்து குடித்தால் 3 தினங்களில் மார்பில் தேங்கி கிடந்த சளி கபம் அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

*இஞ்சித் துண்டு
*துளசி இலைகள்
*மிளகு
*பிரியாணி இலை
*மஞ்சள் துண்டு
*பட்டை
*வெல்லம்
*தண்ணீர்

கசாயம் செய்யும் முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
பின்னர் அதில் 1 துண்டு இடித்த இஞ்சி, 8 துளசி இலை, 1 பிரியாணி இலை, 8 மிளகு (இடித்தது), சிறு துண்டு மஞ்சள், 1 பட்டை, 1 துண்டு வெல்லம் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் அனைத்து பொருட்களும் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து 3 நிமிடங்கள் கழித்து ஒரு கிளாஸுக்கு வடிகட்டி பருகவும். தொடர்ந்து 3 நாட்களுக்கு காலை, இரவு என இருவேளை குடித்து வர மார்பில் தேங்கி கிடந்த சளி கபம் கரைந்து வெளியேறி விடும்.

Previous articleவயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை வெளியேற்றும் வாயுக்கள் வெளியேற இந்த மாயாஜால பானத்தை பருகவும்!
Next articleபண முடக்கம் நீங்கி வரவு அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!