சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்க இந்த பூவில் சட்னி செய்து சாப்பிடுங்கள்!!

0
158
#image_title

சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்க இந்த பூவில் சட்னி செய்து சாப்பிடுங்கள்!!

உடலுக்கு அதிகளவு ஆரோக்கிய நன்மைகளை தரும் வாழைப்பூவில் பாஸ்பரஸ்,பொட்டாசியம்,இரும்பு சத்து,வைட்டமின் ஏ,பி1,சி,கால்சியம்,மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கி இருக்கிறது.

வாழைப்பூவை சுத்தம் செய்து நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.பெண்களுக்கு கருப்பை தொடர்பான பாதிப்புகள் இருந்தால் வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆண்மை குறைபாட்டை போக்க உதவுகிறது.வாழைப்பூ இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.அதுமட்டும் இன்றி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வாழைப்பூவில் சட்னி செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

1)வாழைப்பூ(சுத்தம் செய்தது) – 1 கப்
2)சீரகம் – 1 தேக்கரண்டி
3)மிளகு – 1 டீஸ்பூன்
4)புளி – எலுமிச்சம் பழ அளவு
5)உப்பு – தேவையான அளவு
6)எண்ணெய் – 1 தேக்கரண்டி
7)தயிர் – 1 தேக்கரண்டி
8)துருவிய தேங்காய் – 1 கப்
9)கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரம் எடுத்து தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து நறுக்கிய வாழைப்பூவை போட்டுக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலி வைத்து தயிரில் ஊறவைத்த வாழைப்பூவை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.பிறகு அதில் உப்பு,மிளகுத் தூள், சீரகம் மற்றும் புளி சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

வாழைப்பூ நன்கு வெந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

இதை அரைத்த சட்னியை சேர்த்து நன்கு கலந்து விட்டால் ஆரோக்கியமான வாழைப்பூ சட்னி தயார்.சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வாரத்தில் இருமுறையாவது செய்து சாப்பிட்டு வர வேண்டும்.