மணக்கும் சுவையில் கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் ஹல்வா” இப்படி செய்யுங்க!!

0
31
#image_title

மணக்கும் சுவையில் கேரளா ஸ்டைல் “தேங்காய் பால் ஹல்வா” இப்படி செய்யுங்க!!

அறு சுவைகளில் இனிப்பு என்றால் நம் அனைவருக்கும் அலாதி பிரியம். சர்க்கரை, வெல்லம், கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு சுவை தரும் பொருட்களை வைத்து செய்யப்படும் பண்டங்கள் மிகவும் சுவையாக இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இனிப்பு பண்டங்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம். அந்த வகையில் கேரளாவின் தேங்காய் பால் ஹல்வா அதிக மணம் மற்றும் சுவையில் செய்யும் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவை தேங்காய் பால், அரிசி மாவு, நாட்டு சர்க்கரை உள்ளிட்டவைகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஹல்வா வகை ஆகும்.

தேவையான பொருட்கள்

*தேங்காய் பால் – 2 கப்

*அரிசி மாவு – 1/4 கப்

*நாட்டு சர்க்கரை – 1 1/2 கப்

*முந்திரி பருப்பு – 20

*நெய் – 1 கப்

தேங்காய் பால் ஹல்வா செய்முறை:-

முதலில் 1 மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி 2 கப் அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் 1 1/2 கப் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி கொள்ளவும். பின்னர் 1/4 கப் அரசி மாவு சேர்த்து நன்கு கலந்து இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக் கொள்ளவும்.

தேங்காய் பால் கலவை வேகும் தருணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி விடவும்.
பச்சை வாடை நீங்கி ஹல்வா பதம் வரும் வரை கிளறி விடவும்.

அடுத்து மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். அவை சூடேறியதும் தேவையான அளவு முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்கவும். இந்த நெய் + முந்திரி பருப்பை ஹல்வாவில் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும். இந்த தேங்காய் பால் ஹல்வா கேரளாவில் பேமஸான இனிப்பு வகை ஆகும்.