காய்ச்சல் குணமாக இந்த பவர் புல் கசாயத்தை செய்து பருகுங்கள்..!!

0
115
#image_title

காய்ச்சல் குணமாக இந்த பவர் புல் கசாயத்தை செய்து பருகுங்கள்..!!

காய்ச்சல் பாதிப்புகளில் சாதாரணக் காய்ச்சல், தொடர் காய்ச்சல், அதிகமாகி குறைதல், விட்டு விட்டு வரும் காய்ச்சல் என பல வகைகள் இருக்கிறது.

காய்ச்சல்:-

*டைபாய்டு

*பாக்டீரியா

*டெங்கு

*மலேரியா

இவை காற்றின் மூலம் பரவும் தன்மையை கொண்டிருக்கிறது. சுகாதாரம் இன்மையாலும், தண்ணீர் மூலமும் பரவக் கூடியது. இந்த காய்ச்சலை குணமாக்க மூலிகை கசாயம் செய்து பருகுவது நல்லது.

தேவையான பொருட்கள்:

*இஞ்சி – 1 துண்டு

*உலர் திராட்சை – 1/2 கைப்பிடி

*தேன் – 3 தேக்கரண்டி

*மிளகு – 1/4 தேக்கரண்டி

*ஏலக்காய் – 2

*கொத்தமல்லி விதை – 1/4 தேக்கரண்டி

*பட்டை – சிறு துண்டு

*இலவங்கம் – 2

செய்முறை:-

முதலில் 1 துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, உலர் திராட்சை, கொத்தமல்லி விதை, மிளகு, ஏலக்காய், இலவங்கம், பட்டை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் அரைத்த விழுதை சேர்த்து கலந்து விடவும். 1 1/2 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸாக வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி தேன் கலந்து இளஞ்சூட்டில் பருகவும். இவ்வாறு செய்தால் காய்ச்சல் பாதிப்பு சில மணி நேரத்தில் குணமாகும்.