ஒரே வாரத்தில் முகம் வெள்ளையாக இப்படி செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

ஒரே வாரத்தில் முகம் வெள்ளையாக இப்படி செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Divya

ஒரே வாரத்தில் முகம் வெள்ளையாக இப்படி செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு முகம் வெள்ளையாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கண்ட கண்ட க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்தினால் முக அளவு விரைவில் கெட்டு விடும். இதற்கு இயற்கை வழி தீர்வு சிறந்த ஒன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*ஆலிவ் ஆயில் – 1 தேக்கரண்டி

*முட்டையின் மஞ்சள் கரு – சிறிதளவு

*இலவங்கப்பட்டை தூள்- 1/2 தேக்கரண்டி

*தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும். அதில் 1/2 தேக்கரண்டி அளவு இலவங்கப்பட்டை தூள் சேர்த்து கொள்ளவும். முட்டையின் மஞ்சள் கரு ஒன்று மற்றும் ஆலிவ் ஆயில் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

இந்த கலவையை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நல்ல தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். இதை 15 நிமிடங்கள் வரை முகத்தில் இருக்கும்படி விட்டு பின்னர் நல்ல தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் கருமை முகம் வெள்ளையாக மாறத் தொடங்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*ஆலிவ் ஆயில் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் முகத்தை நல்ல தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். அடுத்து தயார் செய்து வைத்துள்ள கலவையை முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். இதை 15 நிமிடங்கள் வரை முகத்தில் இருக்கும்படி விட்டு பின்னர் நல்ல தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் கருமை முகம் வெள்ளையாக மாறத் தொடங்கும்.