சில தினங்களில் முகப்பருக்கள் மறைய வேண்டுமா? அப்போ இதை தவறாமல் செய்யுங்கள்!!

0
28
#image_title

சில தினங்களில் முகப்பருக்கள் மறைய வேண்டுமா? அப்போ இதை தவறாமல் செய்யுங்கள்!!

முகத்தில் கரும்புள்ளி, பருக்கள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது. குறிப்பாக முகத்தில் பருக்கள் தென்பட ஆரமித்து விட்டால் அவ்வளவு தான் முகம் தன் அழகை இழந்து பொலிவற்று காணப்பட்டு விடும். இதை சரி செய்ய இயற்கை வழிகளை பாலோ செய்வது நல்லது.

அந்த வகையில் வேப்பிலை, கற்றாழை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் முகப்பருக்கள் நீங்க சிறந்த தீர்வாக இருக்கும். இந்த பொருட்கள் அனைத்தும் இயற்கையாகவே கிருமிகளை எதிர்த்து போராடும் திறன் கொண்டவையாக இருக்கிறது. இதை முகத்திற்கு பயன்படுத்தி வந்தோம் என்றால் முகப்பருக்கள் நீங்கி முகம் அழகாக காணத் தொடங்கும்.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*வேப்பிலை – 1/2 கைப்பிடி அளவு

*பச்சை மஞ்சள் துண்டு – 1

செய்முறை:-

ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1/2 கைப்பிடி அளவு வேப்பிலை போட்டுக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 1 பச்சை மஞ்சள் துண்டை சேர்த்து ஒரு சுத்து விடவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். இந்த கலவையை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நல்ல தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள வேப்பிலை + மஞ்சள் கலவையை முகத்திற்கு அப்ளை செய்து கொள்ளவும். இதை 20 நிமிடங்கள் வரை முகத்தில் இருக்கும்படி விட்டு பின்னர் நல்ல தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் காணப்பட்ட பருக்கள், கரும்புள்ளிகள் முழுமையாக மறைந்து விடும். வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆன்டி பாக்ட்ரியாவாக செயல்பட்டு முகத்தில் உள்ள பருக்களை சரி செய்ய [பெரிதும் உதவுகிறது

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*கற்றாழை ஜெல் – 4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு கற்றாழை மடல் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும். 4 தேக்கரண்டி அளவு கற்றாழை ஜெல் போதுமானதாக இருக்கும்.

பின்னர் அதில் 1 தேக்கரண்டி அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். இந்த கலவையை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நல்ல தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள கற்றாழை ஜெல் + மஞ்சள் கலவையை முகத்திற்கு அப்ளை செய்து கொள்ளவும். இதை 20 நிமிடங்கள் வரை முகத்தில் இருக்கும்படி விட்டு பின்னர் நல்ல தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் முகத்தில் காணப்பட்ட பருக்கள், கரும்புள்ளிகள் முழுமையாக மறைந்து முகம் பொலிவாக இருக்கும்.