காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

0
198

தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு சென்று நிறுத்திய பெண்ணை பற்றிய செய்தி மிகவும் வைரலாக பரவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 30 வயதாகிறது. இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பொழுது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவருடன் பழகி வந்துள்ளார்.

நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் காதலாக மாறியது. அதோடு மட்டுமல்லாமல் நேரில் சந்தித்து தங்கள் காதலை இவர்கள் இருவரும் வளர்த்து வந்துள்ளனர். இருவரும் சேர்ந்து இருக்குமாறு பல புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் காதலன் கணேசன் அவர்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இவருடைய திருமணம் வில்லிவாக்கத்திலேயே தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்த நாள் காலையில் திருமணம் நடக்க இருந்தது.

இதனை அறிந்த காதலி இதைப் பற்றி போலீசில் புகார் அளித்தார். காதலி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மண்டபத்திற்கு திருமணம் நடக்க இருக்கும் நேரத்தில் சென்றனர். கணேசனின் உறவினர்களுக்கு அவர் காதலித்த பெண்ணை பற்றிய தகவல்களையும் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் காட்டினர் போலீசார்.
இரு வீட்டாரையும் விசாரித்த நிலையில் கணேசன் காதலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். காதலி அரக்கோணத்தை சேர்ந்தவர் என்பதால் வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வைக்கப்பட்டது. காதலியை கரம் பிடிக்க மறுத்த கணேசன் இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.




Previous articleவெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !
Next articleகிண்டலும் கேளியுமாக நடத்தப்பட்ட நேர்காணல்? திமுக தலைவரின் வாரிசிடம் கேட்ட கேள்விகள் என்ன?