மங்கு தேமல் தோல் அலர்ஜி குணமாக இதை மட்டும் செய்யுங்கள்! 100% பலன் கிடைக்கும்!

Photo of author

By Divya

மங்கு தேமல் தோல் அலர்ஜி குணமாக இதை மட்டும் செய்யுங்கள்! 100% பலன் கிடைக்கும்!

தோலில் ஏற்படக் கூடிய மங்கு, தேமல், படர் தாமரை, பூச்சி கடி அனைத்தும் குணமாக குளிக்கும் பொழுது சோப்பிற்கு பதில் கீழே கொடுப்பட்டுள்ள மூலிகை பொருட்களை கொண்டு பேஸ்ட் தயாரித்து பயன்படுத்துங்கள். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள்
2)வேப்பிலை
3)வெற்றிலை
4)குப்பைமேனி

செய்முறை:-

ஒரு கைப்படி அளவு குப்பைமேனி இலை மற்றும் வேப்பிலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விடவும். இதன் பின்னர் 2 முழு வெற்றிலையை அதில் போட்டு சிறிது கற்றாழை ஜெல்லை சேர்த்து மைய்ய அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

இந்த விழுதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சிறிது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

குளிக்கும் பொழுது சோப்பிற்கு பதில் இந்த மூலிகை பேஸ்டை உடல் முழுவதும் அப்ளை செய்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மங்கு, தேமல், தோல் அலர்ஜி, படர் தாமரை உள்ளிட்ட தோல் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் நீங்கும்.