காணொளி மூலம் திருமணம் நடத்தலாம்!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0
96
Marriage can be done by video!! High court order!!
Marriage can be done by video!! High court order!!

காணொளி மூலம் திருமணம் நடத்தலாம்!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள், பதிவாளர் அலுலவகத்திற்கு நேரடியாக வர வேண்டும். திருமணம் செய்பவர்கள் மற்றும் அவர்களுக்கு சாட்சியாக இருப்பவர்கள் என அனைவரும் பதிவாளர் முன் ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்நிலையில் 2021ம் ஆண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த தான்யா மார்டின் என்பவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில் நான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய மனு தாக்கல் செய்துள்ளேன். ஆனால், தன்னுடைய காதலர் வெளிநாட்டில் இருப்பதாகவும், தற்போது கொரோனாவின் காரணமாக ஊரடங்கு இருப்பதால் அவரால் வர முடியாது அதனால் காணொளி மூலம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என கேட்டிருந்தார்.

இதனை திருவனந்தபுரம் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு காணொளி மூலம் திருமணத்தை பதிவிட உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பலரும் இது போல் காணொளி மூலம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்க மறுத்த நீதிமன்றங்கள், இந்த மனுக்களை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தன.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் முகமது முஷ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இந்த மனுக்களை விசாரித்து சிறப்பு திருமண சட்டத்தின் படி காணொளி மூலம் திருமணத்தை நடத்தி, பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.

2000ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி மிண்ணனு ஆவணங்களுக்கு அனுமதி உண்டு என்பதால் இந்த காணொளி திருமணத்தை ஏற்று கொள்வதில் தவறில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் திருமணத்திற்கு சாட்சியாக இருப்பவர்கள் நேரில் பதிவாளர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என கூறியுள்ளனர்.