சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்!

0
158
#image_title

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்!

வறட்சியை தாங்கி வளரக் கூடிய மூலிகை தாவரங்களில் ஒன்று சோற்றுக் கற்றாழை. இவை குளிர்ச்சி நிறைந்த தாவரம் ஆகும். உடலில் தலை முதல் பாதம் வரை அனைத்து வித பாதிப்புகளுக்கும் தீர்வாக இவை விளங்குகின்றது.

சோற்றுக் கற்றாழையை தோல் நீக்கி அதன் ஜெல்லை பிரித்து சாப்பிட்டாலும் சரி, ஜூஸ் செய்து சாப்பிட்டாலும் சரி எப்படி சாப்பிட்டாலும் கிடைக்கும் பலன் ஒன்று தான்.

சோற்றுக் கற்றாழை க்ரீம், எண்ணெய் ஆகியவை சரும பராமரிப்பிற்கு மிகச் சிறந்த தீர்வாக இருக்கின்றது.

சோற்றுக் கற்றாழை பயன்கள்…

சோற்றுக் கற்றாழையை ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

உடலில் தேங்கி கிடந்த தேவையற்ற கழிவுகள் அனைத்தும் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்பட கற்றாழை சாறு அருந்துவது நல்லது.

கற்றாழை ஜெல்லை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய், மாரடைப்பு ஆகியவை தடுக்கப்படும்.

உடலில் புற்றுநோய் செல் உருவாவதை சோற்றுக் கற்றாழை தடுக்கிறது.

கற்றாழை எண்ணெய் சருமத்தில் ஏற்படும் வறட்சி, அரிப்பு ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது.

கற்றாழை ஜெல் க்ரீம் முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.