பல வகை நோய்களுக்கு மருந்து.. இந்த மூலிகை கீரை..!
தற்காலத்தில் நோயின்றி வாழும் மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு… முன்பெல்லாம் உணவு மருந்தாக இருந்தது.. ஆனால் இன்று மருந்தே உணவு என்ற மோசமான நிலை வந்துவிட்டது.
உச்சி முதல் பாதம் வரை உடலில் நோய் இல்லாத மனிதர்கள் இல்லை… உடலுக்கு போதிய எதிர்ப்பு சக்தி இல்லாமல் போதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் ஆகியவற்றால் தான் அதிகளவு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.
உடலில் எந்த ஒரு நோய் பாதிப்பும் ஏற்படும் இருக்க.. அதிக மருத்துவ குணம் கொண்ட முடக்கத்தான் கீரையை பயன்படுத்துங்கள்.
முடக்கத்தான் கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் முடக்கத்தான் கீரையை அரைத்து விழுதாக்கி பூசி வரலாம்.
முடக்கத்தான் இலையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
முடக்கத்தான் கீரையில் சூப் செய்து குடித்து வந்தால் எலும்பு வலுப்பெறும். காது வலி குணமாக முடக்கத்தான் இலையை அரைத்து சாறு எடுத்து இரண்டு சொட்டு காதுகளில் விட்டு வந்தால் அவை விரைவில் சரியாகும்.
முடக்கத்தான் இலை சாறு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.