“மிக்ஜாம்” வெள்ள நிவாரண தொகை விவகாரம்.. தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்..!!
கடந்த மாத 26 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போனது.
மழை நிவாரண நிதியாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இந்த 4 மாவட்ட மக்களுக்கு ரூ.6,000 ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மக்களுக்கு வழங்கப்படும் வெள்ள நிவாரண தொகை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில் வெள்ள நிவாரண தொகையாக தமிழக அரசு ரேசன் கடைகள் மூலம் வழங்க இருக்கும் 6000 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். ரேசன் கடைகள் மூலம் வழங்கிவதில் முறைகேடு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் மழை வெள்ளத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணத் தொகை சென்று சேருவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையானது விரைவில் நடைபெற இருக்கிறது.