2 நிமிடத்தில் வாயுத் தொல்லை வெளியேற்ற உதவும் அற்புத கசாயம் – தயார் செய்வது எப்படி?

0
133
#image_title

2 நிமிடத்தில் வாயுத் தொல்லை வெளியேற்ற உதவும் அற்புத கசாயம் – தயார் செய்வது எப்படி?

நம்மில் பெரும்பாலானவர்களை பாதித்து வரும் வாயு தொல்லையால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும்.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:-

மலச்சிக்கல், செரிமானக் கோளாறு, துரித உணவு.

தேவையான பொருட்கள்:-

**எலுமிச்சை சாறு

**இஞ்சி

**துளசி

**ஓமம்

செய்முறை..

சிறு துண்டு இஞ்சியை உரலில் போட்டு தட்டிக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு துளசி இலைகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து உரலில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். இதில் இடித்து வைத்துள்ள இஞ்சி, துளசி விழுது மற்றும் ஓமம் 1/4 தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து பருகினால் வாயுத் தொல்லை சில நிமிடத்தில் சரியாகும்.