இந்த சம்மரில் உடலை ஜில்லுனு வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறுடன் இதை கலந்து குடியுங்கள்!!
தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து விட்டது.தென் தமிழகத்தை காட்டிலும் வட தமிழகத்தை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.காலையில் 9 மணிக்கே பங்குனி வெயில் பல்லை காட்டுவதால் பகல் நேரத்தில் வெளியில் சென்று வர முதியவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
உடல் சூட்டை தணித்துக் கொள்ள அனைவரும் இளநீர்,மோர்,நுங்கு,ஜூஸ்,கூல் ட்ரிங்க்ஸ்,ஐஸ் க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.ஆனால் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து உடல் சூட்டை முழுமையாக தணித்துக் கொள்ளலாம் என்றால் நம்ப முடிகிறதா?
எலுமிச்சம் பழம் வைட்டமின் சி சத்து நிறைந்த ஒன்று.இந்த பழத்தில் அதிகளவு கால்சியம்,பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
எலுமிச்சம் பழ சாறு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை கிளாஸிற்கு பிழிந்து குளிர்ந்த நீர்(பானை நீர்) ஊற்றி சிறிது தேன் கலந்து குடித்தால் வெயில் காலத்தில் வரக் கூடிய நோய்கள் பறந்து போகும்.
ஊற வைத்த சப்ஜா விதையை எலுமிச்சம் பழ சாற்றில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பிறகு தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.