“ஆண்மை” மற்றும் “விந்தணுக்களின் எண்ணிக்கை” அதிகரிக்க இதை பாலில் கலந்து குடிங்க!!

0
99
#image_title

“ஆண்மை” மற்றும் “விந்தணுக்களின் எண்ணிக்கை” அதிகரிக்க இதை பாலில் கலந்து குடிங்க!!

இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் ஆண்கள் பலருக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

மலட்டுத் தன்மை அறிகுறி:-

*வாசனை இயலாமை

*விதைப்பை பகுதியில் வலி மற்றும் வீக்கம்

*விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல்

*பாலியல் செயல்பாடுகளில் சிக்கல்

ஆண்மை மற்றும் விந்தணுக்கள் குறைய காரணங்கள்:-

*மோசமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை

*புகைப்பழக்கம்

*மது பழக்கம்

*விந்தணு தண்டு அடைப்பு

1)ஆண்மை அதிகரிக்க வழி:-

தேவையான பொருட்கள்:-

*நெருஞ்சி செடி

*வெள்ளாட்டு பால்

*தேன்

செய்முறை:-

சிறிதளவு நெருஞ்சி செடியை எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு உரலில் போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் 1 கிளாஸ் வெள்ளாட்டு பால் ஊற்றி சில நிமிடங்கள் ஊற விடவும். பிறகு இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து நன்கு கலந்து பருகவும். இவ்வாறு தொடரந்து நெருஞ்சிப் பால் பருகி வருவதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைபாடு பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்.

2)விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழி:-

தேவையான பொருட்கள்:-

*நெருஞ்சி விதைப் பொடி

*நீர்முள்ளி விதைப் பொடி

*வெள்ளரி விதைப் பொடி

*பால்

செய்முறை…

நெருஞ்சி விதைப் பொடி, நீர்முள்ளி விதைப் பொடி, வெள்ளரி விதைப் பொடி உள்ளிட்டவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியவை ஆகும். இந்த மூன்று விதைகளின் பொடியில் இருந்து ஒவ்வொரு தேக்கரண்டி அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் பருக வேண்டும். விருப்பப்பட்டால் தேன் சேர்த்து பருகலாம்.

ஆண்கள் இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும்.

Previous articleஇயற்கை ஹேர் டை.. நரை முடியை 1 மணி நேரத்தில் கருமையாக மாற்றிவிடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!
Next articleவாரத்தில் 2 முறை அகத்தி கீரை ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?