“மொபைல் முத்தம்மா”? ரேஷன் பொருட்கள்.. இனி இப்படி தான் வாங்க வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு!!
நம் இந்திய நாட்டில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகிறது.இதனால் நாடு நாளுக்கு நாள் முன்னேற்றத்தை கண்டு வருகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன் வரை இந்தியாவில் காகித ரூபாய் நாணயம் மற்றும் சில்லறை பயன்பாடு அதிகளவில் இருந்தது.
இதனால் சில்லறை தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது.அதேபோல் காகித நோட்டுகளும் எளிதில் கிழியும் தன்மை கொண்டிருப்பதால் இதை பயன்படுத்துவதற்கும்,மாற்றுவதற்கும் மக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து பொருட்கள் வாங்க பணப் பரிமாற்றம் செய்ய ஆன்லைன் செயலி வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் அதை பயன்படுத்த தொடங்கின.ஆரம்ப காலங்களில் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை தாக்கம் அதிகளவில் இல்லையென்றாலும் பின்னர் அதன் பயன்பாடு மளமளவென அதிகரிக்க தொடங்கிவிட்டது.
பெரிய ஷாப்பிங் மால் முதல் உள்ளூர் பெட்டி கடைகள் வரை அனைத்து இடங்களிலும் பணம் செலுத்த க்யூ ஆர் கோடு முறை கொண்டுவரப்பட்டு இருக்கிறது.இதனால் யுபிஐ செயலிகளான பேடிஎம்,போன் பே,கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் செலுத்தி பொருட்கள் வாங்க சுலபமாக இருப்பதினால் மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டன.
இதை ஊக்குவிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடரந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் தமிழக அரசு மொபைல் முத்தமான என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.இந்த திட்டம் நியாயவிலை கடைகளுக்கு மட்டும் பொருந்தும்.
பொதுவிநியோக திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசால் கோதுமை,அரசி உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும்,பருப்பு,எண்ணெய்,சர்க்கரை உள்ளிட்டவை குறைந்த விலையிலும் விநியோகம் செய்யப்படுவதால் ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தமிழகத்தில் 34,000 அதிகமான நியாயவிலை கடைகள் செய்யப்பட்டு வருகிறது.இதில் 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த பொருட்கள் அனைத்தும் மாதம் ஒரு முறை குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்த பொருட்களை வாங்க மக்கள் ரூபாய் நோட்டுகள் எடுத்து செல்வது தான் வழக்கம்.
ஆனால் தற்பொழுது தமிழக அரசு அறிவிப்பின் படி இனி வரும் காலங்களில் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக யு.பி.ஐ செயலிகளான போன் பே,பேடிஎம்,கூகுள் பே உள்ளிட்டவைகள் மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்து இருக்கிறது.இந்த புதிய திட்டத்திற்கு “மொபைல் முத்தம்மா” என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இவை நியாயவிலை கடைகளில் மட்டும் செயல்படும் என்று அரசு அறிவித்து இருக்கிறது.
மேலும் மொபைல் மூலம் பணம் செலுத்தி நியாயவிலை பொருட்கள் வாங்குவது எப்படி? என்ற முறையான வழிகாட்டலை ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மொபைல் முத்தம்மா திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் செலுத்தும் பணம் நேரடியாக அரசுக்கு கிடைக்கும்.இதில் எந்த ஒரு முறைகேடும் ஏற்பட வாய்ப்பு இல்லை.அதேபோல் ரேஷனில் பொருட்கள் வாங்கும் பொழுது ஏற்படும் சில்லறை தட்டுப்பாடு பிரச்சனை இதன் மூலம் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.