ஏழைகளுக்கு எட்டா கனியாகிய சேலம் அண்ணா பூங்கா?

0
201
#image_title

ஏழைகளுக்கு எட்டா கனியாகிய சேலம் அண்ணா பூங்கா?

சேலத்தில் பல ஆண்டுகளாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பொழுதை கழிப்பதற்கும் பெரியவர்கள் , சிறியவர்கள் ,நடுத்தர குடும்பத்தினர் மற்றும் ஏழை மக்கள் அனைவரும் விளையாடி மகிழ்வதற்கும் ஒரு சிறந்த இடமாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடமாகவும் சேலம் அண்ணா பூங்கா இருந்துள்ளது.

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.12.90 கோடி மதிப்பில் சேலம் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ற வகையில் நீர் விளையாட்டுகள், வண்ண வண்ண ஒளி விளக்குகளில் நீர் நடனம். குளிர்ந்த நிலையில் (–5 டிகிரி) சறுக்கி விளையாடும், ‘பனி உலகம்’ மற்றும் குடும்பத்துடன் அருவியில் குளிக்கும் வகையில் 30 அடி உயர செயற்கை அருவி, குதிரை அமைப்புக்கொண்ட மெர்ரி-கோ-ரவுண்ட் எனப்படும் தரைமட்ட ராட்டினம், கேப்ஸ்யூல் எனப்படும் தரைமட்ட வட்ட ராட்டினம், ஸ்விங்-சேர் எனப்படும் கயிறு ராட்டினம், சிறுவர்களுக்கான செயற்கை மோட்டார் வாகனம் மற்றும் செயற்கை ரயில் ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆனால் தற்பொழுது மறு சீரமைப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கான இரண்டே இரண்டு விளையாட்டு பொருட்கள் மற்றும் லேசர் லைட் , பனி உலகம் ஆகியவையே செயல்பாட்டில் உள்ளது.

விளையாட்டு சாதனங்கள் மற்றும் பனி உலகம் ஆகியவற்றிற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதோடு அதனுடன் சேர்த்து ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது, பனி உலகம் போன்ற விளையாட்டிற்கு மிகவும் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அந்த விளையாட்டுக்கள் ஒருபோதும் எட்டா கனியாக மாறிவிட்டது.

எனவே, ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டணங்களை குறைக்க வேண்டும். மேலும், ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது மட்டுமின்றி அண்ணா பூங்காவிற்கு முறையான சாலை வசதி இல்லாததாலும் மக்கள் நீண்ட தூரம் சென்று சாலையை கடக்க வேண்டியுள்ளதாலும் முறையான சாலை வசதி செய்து தருமாறு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

author avatar
Savitha