முகமது ஷமிக்கு அணியில் இடமில்லை!! வெளியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல்!!

Photo of author

By Vijay

முகமது ஷமிக்கு அணியில் இடமில்லை!! வெளியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல்!!

Vijay

Updated on:

Mohammed Shami has no place in the team

Cricket:  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல் வெளியிட்ட பிசிசிஐ ஷமி அணியில் இல்லை.

 தற்போது இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா உடன் விளையாட உள்ளது.

Mohammed Shami has no place in the team
Mohammed Shami has no place in the team

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது பிசிசிஐ. இந்த அணியில் அபிமன்யு ஈஸ்வரன், ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை இந்திய தேர்ந்தெடுத்துள்ளது.5 ஆட்டங்களில் முதல் ஆட்டம் நவம்பர் 22 ம் தேதி தொடங்குகிறது.

இந்த அணியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம்பெறவில்லை. காயம் காரணமாக நீண்ட நாட்கள் போட்டிகளில் கலந்து கொள்ளாமல்  இருந்தார். இவர் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார், இந்நிலையில் இவர் தற்போது நடக்கும் இந்தியா- நியூசிலாந்து போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பங்கேற்க விலை அதே போல் இந்த ஆஸ்திரேலியா தொடரிலும் பங்கேற்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி ரோஹித் சர்மா(C), ஜஸ்பிரித் பும்ரா(VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (WK), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (WK), ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா , முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளன