இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனரா

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 3 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 83 லட்சத்து 14 ஆயிரத்து 732 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 70 லட்சத்து 75 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 845 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 13 ஆயிரத்து 128 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 26 ஆயிரத்து 227 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.