நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !!

Photo of author

By Parthipan K

நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !!

Parthipan K

Nama Pattinko, everything is terrible!

நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !!

சென்னையில் நுழைவு வாயிலாக அமைந்துள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது.இங்கு முக்கிய ரயில் நிறுத்தமாக செயல்படும் இங்கிலிருந்து சென்னை கடற்கரை வரை புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து கிளம்பும் பல ரயில்கள் செங்கல்பட்டு வழியாக தான் செல்கின்றது.

இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையம் எப்போதும் பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படும்.இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள படிக்கட்டுகளிலும் மற்றும் நடைமேடைகளிலும் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.அங்கு வரும் ரயில் பயணிகள் கொண்டு வரும் பையை பிடுங்கி அதிலுள்ள பொருட்களை எல்லாம் சூறையாடி வருகிறது.

இதனால்  ரயில் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.பயணிகள் கையில் வைத்திருக்கும் அனைத்தையும் பிடுங்குவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.மேலும் அதையும் மீறி விரட்டினால் அவர்களை கடித்து விடுவதாகவும் கூறிகின்றனர்.

அதேபோல் அங்குள்ள சில நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதாகவும் கூறினர்.ரயில் பயணிகள் செல்லும் இடம் ,படிக்கட்டுகள்,டிக்கெட் விற்பனை செய்யும் இடம் என அங்குள்ள பல இடங்களில் நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது.

அவை கும்பலாக ஒன்று சேர்ந்து பயணிகள் இருக்கும் இடத்தில் உள்ளே சென்று சண்டையிட்டும் வருவதால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.எனவே செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சுற்றி திரியும் குரங்குகள் மற்றும் நாய்களை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.