நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த அமைந்துள்ளது இருக்கூர் கிராமம். இது பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான பாலுசாமி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் நூல் பரவுவதால் பிராய்லர் கோழிகள் பாதிக்கப்பட்டு இருந்து வருகின்றன. இதனால் பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகளை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருக்கூர் கிராமத்திலுள்ள திமுக பிரமுகர் பாலுசாமி தனது பண்ணையில் இறந்த கோழிகளை சாலையோரமாக அப்புறப்படுத்தி உள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸ் பீதியில் இருந்த மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பண்ணை உரிமையாளர் பாலுசாமி மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.