Natural Face pack: கேரள பெண்களைப் போல் முகம் பொலிவுடன் இருக்க இந்த 4 பொருட்களை முகத்திற்கு யூஸ் பண்ணுங்க!!
ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் சரும பராமரிப்பு என்பது மிகவும் அவசியம். இதற்காக முகத்திற்கு இரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நபர்கள் அதை உடனடியாக தவிர்க்க பாருங்கள். இரசாயனம் கலந்த பொருட்கள் உடனடி பலன் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். இதனால் இருந்த சரும அழகும் கெடும் நிலை உருவாகி விடும். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது.
தேவையான பொருட்கள்:-
*மஞ்சள் தூள் – 1 சிட்டிகை அளவு
*பன்னீர்(ரோஸ் வாட்டர்) – 1 அல்லது 1 1/2 தேக்கரண்டி
*தேன் – 1 தேக்கரண்டி
*கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
இயற்கையான முறையில் பேஸ் பேக் தாயார் செய்வதற்கு முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்து தோல் நீக்கி கொள்ளவும். பின்னர் அதில் உள்ள ஜெல்லை மட்டும் ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து 1 சிட்டிகை அளவு சருமத்திற்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் 1 தேக்கரண்டி தூயத் தேன் மற்றும் 1 தேக்கரண்டி பன்னீர்(ரோஸ் வாட்டர்) சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
இந்த பேஸ் பேக்கை முகத்தில் யூஸ் பண்ணுவதற்கு முன் தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 முதல் 25 நிமிடம் கழித்து தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள், கரும் புள்ளிகள் மறைந்து முகம் பொலிவாகவும், அழகாகவும் காணப்படும்.