Natural Hair Dye: உங்கள் நரை முடியை நிமிடத்தில் கருமையாக்க உதவும் இயற்கை ஹேர் டை – தயார் செய்வது எப்படி?
நம் தலைமுடி இளம் வயதில் நரைக்க ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இளநரை ஏற்படக் காரணங்கள்:-
*தலை முடியை முறையாக பராமரிக்க தவறுதல்
*முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்
*மன அழுத்தம்
*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தால்
*முறையற்ற தூக்கம்
1)நெல்லிக்காய் + வெந்தயம் ஹேர் டை
தேவையான பொருட்கள்:-
*பெரு நெல்லிக்காய் – 10
*வெந்தயம் – 3 தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
ஹேர் டை செய்யும் முறை..
முதலில் 10 பெரு நெல்லியை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து 3 தேக்கரண்டி வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் இதையும் நெல்லிச்சாறு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
அடுத்து 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின்னர் இதை தலை முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வரை ஊறவிட்டு சீகைக்காய் போட்டு தலையை அலசிக் கொள்ளவும்.
இவ்வாறு வாரத்திற்கு 3 முதல் 4 முறை செய்து வருவதன் மூலம் நரை முடி அனைத்தும் கருமையாக மாறத் தொடங்கும்.
2)பாதாம் எண்ணெய் + எலுமிச்சை சாறு ஹேர் டை
தேவையான பொருட்கள்:-
*பாதாம் எண்ணெய் – 3 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
செய்முறை…
ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். பின்னர் இதை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் அப்ளை செய்து 1 மணி நேரம் வரை ஊற விடவும்.
பிறகு மைல்டான ஷாம்பு உபயோகித்து தலை முடியை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட நரை முடி அனைத்தும் கருமையாக மாறி முடி வளர்ச்சி அதிகரிக்கும்.