டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

0
31
#image_title

டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

தினமும் காலையில் டீ குடித்தால் தான் அன்றைய காலை பொழுது புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பது நம்மில் பெரும்பாலானோர் கருத்து. அதேபோல் டீ யில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதை பலரும் விரும்புகிறார்கள்.

இவ்வாறு நாம் தினமும் டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது நம் உடலுக்கு பல்வேறு தீமைகளை ஏற்படுத்தும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. பிஸ்கட் மைதா, சர்க்கரை உள்ளிட்டவைகளை மூலப்பொருளாக வைத்து தயாரிக்கப்படுகிறது.

இந்த பிஸ்கட்டை நாம் தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்த விவரம் இதோ.

1)உடல் எடை அதிகரிப்பு

பிஸ்கட்டில் கலோரிகள், சுகர், கார்போஹைட்ரேட் உள்ளிட்டவைகள் அதிகளவில் உள்ளது. அதேபோல் நாம் தயாரிக்கும் டீயிலும் சுகர் சேர்க்கப்படுகிறது. எனவே பிஸ்கட்டை டீயில் தொட்டு சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் விரைவில் உடல் எடை அதிகரித்து விடும். இதனால் பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

2)மலச்சிக்கல்

நாம் விரும்பி உண்ணும் பிஸ்கட்டில் அதிகளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. இவற்றை தொடர்ந்து உண்பதால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

3)இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்

பிஸ்கட்களில் கொழுப்பு, கார்போஹைட்ரேட்கள், சர்க்கரை உள்ளிட்டவைகள் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. இவற்றை உண்ணுவதால் நம் உடலில் உள்ள இரத்த சரக்கரையின் அளவு அதிகரிக்கும்.

4)வயிற்றுப்போக்கு

நாம் டீயில் ஊறவைத்து உண்ணும் பிஸ்கட்கள் நம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. இந்த பிஸ்கட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு வயிற்றுப்போக்கு ஏறப்டத் தொடங்கி விடும்.

5)இரத்த அழுத்தம்

நாம் உண்ணும் உப்பு பிஸ்கட் நம் உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் அபாயத்தை கொண்டிருக்கிறது.

6)முகபருகள் ஏற்படும்

நாம் சுவைக்கும் டீ மற்றும் பிஸ்கட்டில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் நம் சருமத்தில் சீபம் சுரப்பு அதிகரித்து பருக்கள் உருவாகத் தொடங்கும்.