வெள்ளை முடியை கருமையாக்கும் இயற்கை ஹேர் டை.. நீங்களே செய்யலாம்!

0
167
#image_title

வெள்ளை முடியை கருமையாக்கும் இயற்கை ஹேர் டை.. நீங்களே செய்யலாம்!

வெள்ளை முடியை கருமையாக்க கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கை பொருட்களை கொண்டு டை தயாரித்து பயன்படுத்துங்கள்.

1)டீ தூள்
2)இண்டிகோ பவுடர்
3)ஆம்லா பவுடர்
4)மருதாணி பவுடர்
5)கறிவேப்பிலை பவுடர்
6)கரிசலாங்கண்ணி பவுடர்

ஒரு பாத்திரத்தில் 2 முதல் 3 ஸ்பூன் டீ தூள் சேர்த்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். டீ தூள் நிறம் தண்ணீரில் நன்கு இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் இண்டிகோ பவுடர் சேர்க்கவும். அதன் பின்னர் 1 ஸ்பூன் ஆம்லா பவுடர் மற்றும் 2 ஸ்பூன் மருதாணி பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அடுத்து 2 ஸ்பூன் கறிவேப்பிலை பவுடர் மற்றும் 1 ஸ்பூன் கரிசலாங்கண்ணி பவுடர் சேர்த்து கலந்து விட்ட பின்னர் டீ தூள் தண்ணீரை வடிகட்டி… இந்த பவுடரில் சேர்த்து கட்டி படாமல் நன்கு கலந்து விடவும்.

இதை ஒரு நாள் முழுக்க ஊறவிட்டு.. மறுநாள் தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.

இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் தலை முடி அனைத்தும் நிரந்தரமாக கருமையாகி விடும்.