மஞ்சள் கலர் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட் தயாரிப்பது எப்படி?

0
134
#image_title

மஞ்சள் கலர் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட் தயாரிப்பது எப்படி?

பற்கள் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். பற்களில் கறை, அழுக்கு, சொத்தை இருந்தால் தன் வலிமையை பற்கள் விரைவில் இழந்து விடும்.

பற்களில் உள்ள கறைகளை செலவின்றி நீக்குவதற்கான எளிய வழிகள் உங்களுக்காக…

தேவையான பொருட்கள்:-

1)அரிசி
2)எலுமிச்சை சாறு
3)தேங்காய் எண்ணெய்
4)பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட்

செய்முறை:-

2 ஸ்பூன் அரிசியை தண்ணீர் போட்டு அலசி ஒரு காட்டன் துணியில் போட்டு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த அரிசி பொடியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும். ஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் விரைவில் ரிசல்ட் கிடைக்கும்.

அடுத்து அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு சிறிது பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்டை சேர்த்து நன்கு கலக்கி பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை பிரஷில் வைத்து பல் துலக்கி வந்தால் பற்களில் படிந்து கிடந்த மஞ்சள், அழுக்கு கறைகள் அனைத்தும் நீங்கி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி
2)உப்பு

செய்முறை:-

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த இஞ்சி பேஸ்ட்டில் சிறிது தூள் உப்பு சேர்த்து கலந்து பற்களை துலக்கி வந்தால் பற்களில் படிந்து கிடந்த மஞ்சள் கறை முழுவதும் நீங்கி பற்கள் வெண்மையாகும்.