Natural Hair Dye: இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக மாற்ற இதை ட்ரை பண்ணுங்கள்!

0
67
#image_title

Natural Hair Dye: இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக மாற்ற இதை ட்ரை பண்ணுங்கள்!

இன்றைய காலத்தில் சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு உருவாகி விட்டது. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையால் இளம் வயதில் பல்வேறு பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும். நம் தலையில் நரை முடி எட்டி பார்க்க தொடங்கிவிட்டால் உடனே இரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதை அனைவரும் வழக்கமாக்கி வருகின்றனர். ஆனால் இந்த இரசாயனம் கலந்த ஹேர் டையால் முடி கொட்டுதல், உடல் சார்ந்த பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு விடும்.

இளநரை ஏற்படக் காரணங்கள்:-

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது

*தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது

*ஆரோக்கியமற்ற உணவுகள்

இதற்கு இயற்கை வழிகளில் தீர்வு காண முயற்சிப்பது சிறந்த ஒன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*ஓமவல்லி இலை – 1 கைப்பிடி அளவு

*அவுரி பொடி – 2 தேக்கரண்டி

*மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு

*வெள்ளை கரிசலாங்கண்ணி பவுடர் – 1 தேக்கரண்டி

*செம்பருத்தி பூ – 15

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கைப்பிடி அளவு ஓமவல்லி இலை, 1 கைப்பிடி அளவு மருந்தானி இலை, 15 செம்பருத்தி பூக்களை போட்டு கொள்ளவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தப்படுத்தி கொள்ளாவும்.

பிறகு இதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும். செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுக்கவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள ஓமவல்லி இலை, மருதாணி இலை மற்றும் செம்பருத்தி இதழ்களை போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள ஓமவல்லி + மருதாணி + செம்பருத்தி கலவையை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்து பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் அதில் 1 தேக்கரண்டி அளவு வெள்ளை கரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து கலக்கி விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இந்த கலவையை 10 முதல் 15 நிமிடத்திற்கு ஆற விடவும். அடுத்து 2 தேக்கரண்டி அளவு அவுரி பொடி சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இந்த ஹேர் டையை தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி போட்டு நன்கு மஜாஜ் செய்து கொள்ளவும். 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவதன் மூலம் நரை முடி அனைத்தும் கருப்பாக மாறத் தொடங்கும்.