உடல் சூடு தணிய இயற்கை வைத்தியம்! 100% பலன் உண்டு..!
உடல் உஷ்ணமானது காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. அதிக நேரம் வெயிலில் பணி புரிந்தாலோ, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தாலோ உடல் உஷ்ண பாதிப்பு ஏற்படும். இந்த உடல் உஷ்ணத்தால் உச்சி முதல் பாதம் வரை அனைத்து பகுதிகளும் ஆரோக்கியத்தை இழந்து விடுகிறது.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள்;-
*முடி உதிர்வு
*முகப்பரு
*வயிற்று வலி
*உடல் எரிச்சல்
இந்த உடல் உஷ்ணத்தை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:-
*ரோஜாமொக்கு
*சுக்கு
*ஏலக்காய்
*கொத்துமல்லி
செய்முறை…
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் 5 கிராம் என்ற அளவில் எடுத்து நிலையில் உலர்த்தி கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து உலர்த்தி வைத்துள்ள பொருட்களை சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து ஆற விடவும்.
பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி சிறிதளவு தேன் குழைத்து சாப்பிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் தேக உஷ்ணம் குறையும். இந்த ரெமிடியை காலை, மாலை என இரு நேரமும் சாப்பிட்டு வரலாம்.