உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய இயற்கை தீர்வு..!
இன்றைய ஆரோக்கியமற்ற உலகில் உயர் இரத்த அழுத்தம்(BP) அனைவருக்கும் ஏற்படும் சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது.
உயர் இரத்த அழுத்தம்(BP) மருந்து, மாத்திரை இன்றி குறைக்க இயற்கை வழிகள் இதோ…
தீர்வு 01:-
*எலுமிச்சை சாறு
*தேன்
*உப்பு
*தண்ணீர்
செய்முறை…
எலுமிச்சை சாறு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஒரு கிளாசில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து, 1 ஸ்பூன் தேன் 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி கலக்கி அருந்தவும். இவ்வாறு செய்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
தீர்வு 02:-
*பாதாம் பருப்பு
*பால்
5 முதல் 8 பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை சூடான பாலில் கலந்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
தீர்வு 03:-
*கேரட்
*தேன்
ஒரு கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து எடுக்கவும். இதில் சிறிது தேன் கலந்து குடித்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
தீர்வு 04:-
*இஞ்சி
*தேன்
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.