கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஒரு நாளில் தீர்வு வேண்டுமா?
வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருந்தால் நம் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும்.
காரணம் இவை சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை உண்கின்றன. இதே உணவை நாம் சாப்பிடும் பொழுது உடலில் நுண்கிருமிகள் சென்று பல வித நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஆரம்ப நிலையிலேயே முடிவுக்கு கட்டுவது நல்லது.
தேவையான பொருட்கள்:-
*வெந்நீர்
*எலுமிச்சை சாறு
*பேக்கிங் சோடா
செய்முறை…
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெந்நீர் 1 டம்ளர் ஊற்றி அதில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதை கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளிப்பதன் மூலம் அதன் தொல்லை நீங்கும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*பெப்பர்மிண்ட் ஆயில்
*லாவண்டர் ஆயில்
செய்முறை:-
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 தேக்கரண்டி பெப்பர்மிண்ட் ஆயில் மற்றும் 2 தேக்கரண்டி லாவண்டர் ஆயில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளிப்பதன் மூலம் அதன் தொல்லை நீங்கும்.