எலி தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ 2 பொருளை இப்படி யூஸ் பண்ணுங்கள்!

Photo of author

By Divya

எலி தொல்லைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ 2 பொருளை இப்படி யூஸ் பண்ணுங்கள்!

உங்களில் பலரது வீட்டில் எலி தொல்லை அதிகம் இருக்கும். இந்த எலிகள் வீட்டில் இருக்கின்ற பொருட்களை சேதப்படுத்துவதால் நமக்கு அவை பெரும் தொந்தரவாக மாறிவிடுகிறது. எலி கடித்தால் உயிருக்கு ஆபத்து என்பதினால் பலரும் எலிகளை விரட்ட எலி மருந்து வைக்கின்றனர்.

ஆனால் எலிகள் இதை உண்டு வீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் மயங்கி இறந்து விடுவதால் அவை வீடு முழுக்க துர்நாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பலரும் எலி மருந்து வைப்பதை விரும்புவதில்லை.

இதற்கு மாற்றாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எலிகளை சாகடிக்கமால் விரட்டி விடலாம்.

1)புதினா எண்ணெய்(மின்ட் ஆயில்)
2)தண்ணீர்

ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் 3 முதல் 4 சொட்டு புதினா எண்ணெய் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

இதை வீடு முழுக்க ஸ்ப்ரே செய்வதன் மூலம் எலி நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.

1)தேங்காய் துண்டுகள்
2)நாப்தலின் உருண்டை

ஒரு காகிதத்தில் 2 நாப்தலின் உருண்டைகளை போட்டு இடித்துக் கொள்ளவும். அடுத்து தேங்காய் துண்டுகள் சிறிது எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த தேங்காய் துண்டுகளின் மீது நாப்தலின் உருண்டை தூள் சேர்த்து கலந்து விடவும். இதை வீட்டில் எலி நடமாட்டம் காணப்படும் இடங்களில் வைத்து விடவும். இதை எலிகள் சாப்பிட்ட உடன் வீட்டை விட்டு தெறித்தோடிவிடும்.